வெளியிட்ட தேதி : 19.08.2017
micromotor antibiotic treatment
ஆரோக்கியம்

Medical robotics: micromotor antibiotic treatment reduces acidity in the stomach

வயிற்றுப்புண்களை சரிசெய்யும் சிறு ரோபோக்கள் (மைக்ரோ மோட்டார்கள் / micromotors) நேரடியாக வயிற்றுக்குள் நீந்திச் சென்று மருந்துகளை வழங்கி குடற்புண்களை குணப்படுத்தும் முறை கண்டறியப்பட்டுள்ளது. இந்த சிறு ரோபோக்கள் மனித தலை முடியின் தடிமனைக் காட்டிலும் அரை மடங்கு குறைந்த‌ பருமன் (micromotors measuring half the width of a human hair) உடையவை.

பொதுவாக வயிற்றில் அதிகமாகச் சுரக்கும் அமிலத்தன்மை காரணமாகவே குடல் புண்கள் ஏற்படுகின்றன. இந்த அதீத‌ அமிலத்தன்மை கொண்ட‌ வயிற்றுக்குள் பயணிக்கும் ஆற்றலுடன் இந்த‌ ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன‌. முதன் முறையாக எலிகளில் இந்த ரோபோக்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன‌. வெற்றிகரமாக இந்த‌ சோதனை நிகழ்ந்தது.

அனைத்து சோதனைகளும் கலிஃபோர்னியா பல்கலைக்கழக சான் டியாகோ இன்ஸ்டிடியூஷனல் விலங்கு பராமரிப்பு மற்றும் பயன்பாட்டுக் குழு (IACUC) விதிமுறைகளுக்கு இணங்கியிருந்தது. கலிபோர்னியா மற்றும் சான்டிகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்தான் இந்தமைக்ரோ மோட்டார்களை உருவாக்கியுள்ளனர்.

இந்த‌ சோதனையின் (micromotor antibiotic treatment) மூலம் தொடர்ச்சியாக ஐந்து நாட்களுக்கு மருந்தினை செலுத்தி வந்தால் குடற்புண் தாக்கத்திற்கு சிறந்த நிவாரணம் பெற்றுக்கொள்ள முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான மருந்துகளைப் பயன்படுத்துவதை விட சிறந்தது.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.