சர்வாங்க ஆசனம், உடல் மெலிய, இரத்த ஓட்டம் அதிகரிக்க செய்ய வேண்டிய யோகா ஆசனம்
சர்வாங்காசனம், உடலின்அனைத்து தசைகளையும் உட்படுத்தும் யோகாசனமாகும். இது தலைகீழாக (தலை பூமியிலும் கால், மேல் ஆகயத்தை நோக்கி) செய்யப்படும் ஆசன வகையாகும். இவ்வகை ஆசனங்களில், புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக பயிற்சி செய்வதன் மூலம் உடல் விரிவடைவதுடன், சீரிய இரத்த ஓட்டமும் பெறுகிறது. இப்படி, பல ஆரோக்கிய பலன்களை உடைய
தலைகீழ் யோகாசனத்தில்,சர்வாங்காசனம் உடல் முழுவதும் இரத்த ஓட்டம் அதிகரிக்க உதவுகிறது.
சர்வாங்காசனம் செய்யும்போது இரத்த ஓட்டம் உடலின் கீழ்ப்பகுதியிலிருந்து இதயத்திற்கு சென்றடைகிறது. இவ்வகை பயிற்சி கால்களில் சுருள் சிரை நரம்புகள் ஏட்படாமல் தடுக்க உதவுகிறது. சர்வாங்காசனத்தால் நுரையீரல் வலுப்படும். இயல்பான சுவாசத்தின் போது, புவி ஈர்ப்புவிசையின் காரணமாக நுரையீரலின் கீழ் பகுதி மிகுதியான ஆக்சிஜன் பெறுகிறது. ஆனால் சர்வாங்காசனம் போன்ற தலைகீழாகப்பட்ட யோகா செய்யும்போது நுரையீரல் மேல் பகுதிகளில் ஆக்சிஜன் அதிகம் பெறப்பட்டு, நுரையீரலின் திசு திறன் வலுப்படுகிறது. தலைகீழ் நிலையான ஆசனம் மூளைக்கும் நல்ல இரத்த ஓட்டத்தை அனுமதிக்கிறது. இதனால் மன விழிப்புணர்வுடன் காணப்படும். மன செறிவும் (Concentration) மேம்படும்.