Needle-Covered Patch Dissolves Excess Body Fat
Technology

Weight-loss 'fat patch' which targets Excess Body Fat. The Needle-Covered Patch burns Body Fat Wherever You Stick It

மனிதர்களில் பொதுவாக‌ இரண்டு வகை கொழுப்பு உண்டு. ஒன்று வெள்ளை கொழுப்பு (white fat) - இது அதிக‌ அளவிலான‌ சக்தியை பெரிய ட்ரைகிளிசரைடு துளிகளாக‌ (triglyceride droplets) சேகரித்து வைத்துக்கொள்ளும் மற்றொன்று பழுப்பு கொழுப்பு (brown fat), சிறு துளிகளாக‌ காணப்படும் இந்த‌ கொழுப்பு - அதிக அளவில் மைட்டோகாண்ட்ரியாவை கொண்டு கொழுப்பினை கரைத்து சக்தியைக் கொடுக்கும்.

பல ஆண்டுகளாக, ஆராய்ச்சியாளர்கள் வெள்ளை கொழுப்பை பழுப்பு நிற கொழுப்பாக‌ மாற்றும் சிகிச்சை முறைகளை ஆராய்ந்து வருகின்றனர். பல மருத்துவ ரீதியாக கிடைக்கக்கூடிய மருந்துகளைக் கொண்டு பிரவுனிங்கை (வெள்ளை கொழுப்பிலிருந்து பழுப்பு கொழுப்பு) செய்யமுடியும், ஆனால் இவை அனைத்தும் மாத்திரைகள் அல்லது ஊசிகளாகத்தான் கிடைக்கின்றன‌. உடல் முழுதும் மருந்துகள் உட்படுத்துவதால், இது வயிற்று வலி, எடை அதிகரிப்பு மற்றும் எலும்பு முறிவுகள் போன்ற பக்க விளைவுகளுக்கு வழி செய்கின்றன‌.

இந்நிலையில், தற்போது அதிகப்படியான‌ தேவையற்ற கொழுப்பினை எரிக்கும் பேட்ச் / இணைப்பு ( 'fat patch') தயார்செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் ஆராய்ச்சியாளர்களால் (Researchers at Columbia University Medical Center in New York ) உருவாக்கப்பட்டது. அமெரிக்காவில் வெற்றிகரமாக‌ ஆரம்ப சோதனை நிகழ்த்தப்பட்ட இந்த‌ பாட்ச் ( 'fat patch') 20 சதவிகிதம் கொழுப்பினை உடம்பிலிருந்து (பாகம்) குறைக்கலாம் ( reduce localised fat by 20 per cent ) என்று சுட்டிக்காட்டி உள்ளது.

கொழுப்பு பேட்ச் ஆனது தோலின் மீது ஒட்டக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. உடலில் காணப்படும் அதிகப்படியான‌ கொழுப்பினை கரைக்கக்கூடிய பேட்ச் சிறிய ஊசி போன்ற அமைப்புக்களைக் கொண்டது. இந்த பேட்ச் ஆனது நேனோ துகழ்களின் உள் இருக்கும் மருந்தினை உடலினுள் செலுத்துகின்றது. நானோ துகள்கள் திறம்பட மருந்துகளை தக்க‌வைத்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டன. படிப்படியாக மருந்து திசுவிற்குள் செலுத்தப்பட‌ இவை சுருங்கிவிடுகின்றன‌. அருகிலுள்ள திசுக்களில் மெதுவாக‌ செலுத்தப்படுவதால், மருந்துகள் உடனடியாக‌ உடல் முழுவதிலும் பரவுவதில்லை.

நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் (Researchers at Columbia University Medical Center in New York ), எலிகள் மீது கொழுப்பு பேட்ச் ( 'fat patch') சாதனத்தை பரிசோதித்த போது, சிகிச்சையளிக்கப்பட்ட‌ , ப‌டாத பாகங்களை ஒப்பிடும்போது கொழுப்பு 20 சதவிகிதம் இழந்திருப்பதை கண்டுபிடித்தனர். எலிகளில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ள இந்த பேட்ச் ஆனது இதுவரை மனிதர்களில் பரீட்சிக்கப்படவில்லை.

மனித உடலில் பரிசோதனைக்குப்பின் முயற்சி வெற்றியளிக்குமாயின் எதிர்காலத்தில் உடல் பருமன் காரணமாக தவிப்பவர்களுக்கு இந்த‌ கொழுப்பு பாட்ச் சிறந்த தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.