ஆரோக்கியம்

How Low Sodium diet helps for weight loss

இதுபற்றிய‌ புத்தகம்Read Books about Low Sodium Diet

Low Sodium Diet For Weight Loss and Health care

Why low sodium diet is considered to be so helpful, both for general health and weight loss. Low sodium diet keeps your heart in a good condition, controls and reduces blood pressure. Eating a diet with a lot of sodium raise your blood pressure — one of the main risk factors not only for heart attacks but for strokes.

Foods to Include in a Low Sodium Diet are Fresh fruits and vegetables,Fresh meats,Most dairy products, Whole grains like whole wheat pasta and bread or brown rice, Unsalted nuts and seeds of all kinds, Dry beans, peas and lentils, Eggs, Fresh or dry herbs to add flavor to favorite dishes, Olive oil or other oils like safflower or sunflower oil.

உங்களின் இதய‌ நலத்தினை மேம்படுத்தவும் உடல் இடையை குறைக்கவும் விரும்புகிறீர்களா?

அப்படி நீங்கள் சிந்திப்பீர்களானால் உங்களின் வாழ்க்கை முறையில் சிறு மாற்றம் கொள்ள‌ வேண்டும். ஆம். குறைந்த‌ சோடியம் உணவுகளைத் தேர்ந்தெடுக்க‌ வேண்டும். இந்த‌ உணவு பழக்கம் (food habits) எளிதானது மற்றும் மலிதானதும் கூட‌. நீங்கள் இப்பழக்கத்தினை ஏற்படுத்திக்கொள்ள‌ யோசனை செய்ய‌ எடுத்துக்கொள்ளும் நேரம்தான் !. ஆனால் அதனால் உண்டாகும் பயன் மேன்மையானது.

குறைவான‌ சோடியம் கலந்த‌ உணவு ஏன்?

சுகாதாரம் மற்றும் உடல் எடை இழப்பதற்காக‌ குறைந்த சோடியம் உணவு பல‌ காரணங்களுக்காக‌ மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.

மிகவும் முக்கியமான‌ காரணங்களுள் ஒன்று : உங்களது இதய‌ நலத்திற்கு உகந்தது. ஏனெனில் நீங்கள் அதிக‌ சோடியம் கலந்த உணவினை எடுத்துக்கொள்ளும்போது உங்களின் இரத்த‌ அழுத்தம் அதிகரிக்கின்றது. இரத்த‌ அழுத்தம் உயர் இரத்த‌ அழுத்தத்திற்கு (hypertension) வழிவகுக்கும். எனவே குறைந்த சோடியம் (low sodium food) கலந்த‌ உணவு இதய‌ நோயினைத் தடுக்க‌ ஒரு முக்கியமான காரணமாக‌ இருக்கிறது.


Low Sodium Fruits ans Vegetables

உடல் எடை குறைதல்

குறைந்த சோடியம் கலந்த‌ உணவு எடை இழக்க‌ உதவும்.

உணவில் உப்பு நிறைய இருந்தால், உங்கள் உடல் நீரை தக்க வைத்துக் கொள்ளும். இதன் விளைவாக வீக்கம், அசெளகரியங்கள் மற்றும் அதிகரிக்கப்பட்ட தண்ணீர் எடை என‌ உடலினை வருத்தும். நல்ல செய்தி என்னவென்றால் குறைந்த சோடியம் உணவு இயல்பாகவே இந்த சிக்கலைகளைச் சரிசெய்ய உதவும். இதனால் உடலில் அதிகப்படியான திரவங்கள் சேராதிருக்கும்.

குறைந்த‌ சோடியம் உணவினில்

(பத்திய‌ உண‌வு) சேர்த்துக்கொள்ள‌ வேண்டியவை

இங்கே கொடுக்கப்பட்ட‌ உணவு பொருட்கள் நாம் அனுதினமும் உபயோகிப்பதுதான்.இருந்தாலும் நாம் பட்டியலிலுள்ள‌ உணவு வகைகளைத்தான் உண்கின்றோமா என‌ சரிபார்த்தல் பத்தியத்தினை சிறப்பித்து உடல் ஆரோக்கியத்தினை மேம்படுத்தும்.

நல்ல‌ பழங்கள் மற்றும் காய்கறிகள்
நல்ல‌ இறைச்சி
முட்டைகள்
பெரும்பாலான பால் பொருட்கள்
முழு கோதுமை பாஸ்தா மற்றும் ரொட்டி அல்லது பழுப்பு (பிரவுன்) அரிசி போன்ற முழு தானியங்கள்
உப்பில்லாத கடலைகள் மற்றும் அனைத்து வகையான விதைகள்
உலர் பீன்ஸ், பட்டாணி மற்றும் பயறு (அடைத்து சேமிக்கப்படாத‌)
புதிமையான‌ அல்லது உலர்ந்த மூலிகைகளை உங்களின் பிடித்த உணவுகளுக்குச் சுவை சேர்க்கும்
ஆலிவ் அல்லது செந்தூரகம் எண்ணெய் அல்லது சூரியகாந்தி எண்ணெய் போன்ற மற்ற எண்ணெய்கள்
புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.