வெளியிட்ட தேதி : 01.06.2013
Gymnasium-exercises
ஆரோக்கியம்

List of gym equipments / machineries to work out.

List of Gym equipment and machines in a Fitness center.

நீங்கள் வீட்டில் உடற்பயிற்சி அறை உருவாக்கும் எண்ணத்துடன், ஒரு இயந்திரம் வாங்கும் வேளையில் உடற்பயிற்சி இயந்திரங்களின் சரியான பெயர்களை தெரிந்து கொள்வது அவசியமாகும். இதற்கு முன்னர் இந்த இயந்திரங்கள் பற்றி நீங்கள் அறிவதற்கு ஆர்வம் செலுத்தவில்லையெனில் இப்போது அதற்குரிய‌ நேரமாகும். ஜிம்மிற்கு செல்பவராக‌ இருந்தாலும் ஒரு சில‌ உபகரண‌ங்கள், துரதிர்ஷ்டவசமாக‌ உங்களின் கவனத்தில் (அ) எண்ணத்திலோ நிற்பதில்லை.

ஜிம்மில் ஒவ்வொரு உபகரணமும் (மெஷினும்) தனித்தன்மை வாய்ந்தவை. இவை வ‌ழக்கமாக தொழில்முறை உடற்பயிற்சி நிலையங்களில் மட்டுமே காண‌ முடியும். இருப்பினும் சிலவை வீட்டின் உடற்பயிற்சி அறையிலும் சேர்க்கப்படுகிறது. எனவேதான் எந்தவொரு இயந்திரம் உங்களின் உடற்பயிற்சிக்கு ஏற்றது என புரிந்து கொள்ள, உபகரணங்களின் பெயர்களை அறிந்து கொள்ள‌ வேண்டும்.

மிகவும் பிரபலமான மற்றும் பொதுவான உடற்பயிற்சி இயந்திரங்களை கீழேக் காணாலாம்.

பெஞ்ச் பிரஸ் இயந்திரம் [The bench press machine]

பெஞ்ச் பிரஸ் இயந்திரம் உடற்பயிற்சி உபகரணங்களுள் மிகவும் பிரபலமான ஒன்று. அது மார்பு பகுதியின் உடற்பயிற்சிக்கென‌ வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் தோள்கள் மற்றும் டிரைசெப்ஸ்களின் பயிற்சிக்கும் பயன்படுத்த‌ முடியும். இப்பிரிவில் உற்பத்தியாகும் அனைத்து இயந்திரங்களும், சரிப்படுத்தக்கூடிய (adjustable) இருக்கைகள் மற்றும் எடை அடுக்குகள் கொண்டிருக்கும். அவை சாய்வாகவோ அல்லது நடுவரையாகவோ (incline or decline) அமர்ந்திருக்க‌ வடிவமைக்கப்படும்.

செஸ்ட் ஃப்ளை இயந்திரம் [The chest fly machine]

செஸ்ட் ஃப்ளை இயந்திரம் (பெக் ஃப்ளை இயந்திரம் என்றும் படும்) , மார்பு பகுதியிலுள்ள‌ தசைகளை மட்டும் குறிவைத்து பயிற்சி செய்ய‌ உதவுகிறது. இவ்வகை இயந்திரங்கள் மல்லாந்து படுத்து (அ) உட்கார்ந்து பயிற்சி செய்யக்கூடிய‌ இரண்டு மாடல்களில் கிடைக்கும், இந்த இயந்திரங்கள் வசதியை அதிகரிக்க‌ பட்டைகள் (பேடுகள்) கொண்டுள்ளன‌. பேடுகள் இடையேயான‌ தூரத்தையும் சரிசெய்ய‌ அனுமதிக்கிறது. இந்த உடற்பயிற்சி இயந்திரம் கொண்டு டிரைசெப்ஸ்கள் மற்றும் தோள்களில், கூட பயிற்சிகள் செய்ய‌ முடிந்தாலும் இவை முழுக்க‌ முழுக்க‌ மார்பு தசைகளை வலுப்படுத்தவே உபயோகம் செய்யப்படுகிறது..

ஷோல்டர் பிரஸ் இயந்திரம் [Shoulder press machine ‍ = தோள்பட்டை அழுத்தி / வலுவாக்கும் இயந்திரம்]


பெயர் குறிப்பிடுவதுபோல்,ஷோல்டர் பிரஸ் இயந்திரம் தோள்களை வலுவாக்க‌ பயிற்சி செய்ய‌ உதவுகிறது. அவை டிரைசெப்ஸ்களை மெருகேற்றி, நல்ல‌ வடிவம் கொடுக்கின்றன‌. கைப்பிடிகளை பிடித்து, மெதுவாக, கட்டுப்படுத்தப்பட்ட இயக்கங்களில் தலையின் மேல் இழுத்து, காது வரை கீழாகக் கொண்டுசென்று பயிற்சி செய்யப்படுகிறது. முழங்கைகள் பயிற்சிகள் போது மடக்கிய‌ நிலையில் வைக்கப்படும்.

லாத் புள்‍-டவுண் இயந்திரம் [Lat pull-down machine]


லாத் புள்‍-டவுண் இயந்திரம், தோள்கள், கைகள், கழுத்து, மேல் மற்றும் மத்திய முதுகு தசைகள் ஆகியவற்றை, கூட்டு உடற்பயிற்சி மூலம் பராமரிக்கிறது. இயற்கையான‌ கீழ்ப்பகுதி வளைவுகளை பயிற்சியின் போது பராமரிப்பது அவசியமாதலால் அத்தசைகளை இயக்கவும், தசைகளை நிலைப்படுத்தி காயங்களை தவிர்க்கவும், சரியான‌ பலன்பெறவும் இந்த‌ இயந்திரம் உதவுகிறது.

கேபிள் றோ இயந்திரம் [Cable row machine]


கேபிள் றோ இயந்திரம் கூட்டு உடற்பயிற்சிக்கென‌ தயாரிக்கப்பட்ட‌ மற்றொரு இயந்திரம் ஆகும். கேபிள் றோ இயந்திரம் முக்கியமாக மேல் மற்றும் நடுத்தர பின் தசைகளின் மெருகேற்றத்திற்கே, மேலும் அவை கீழ் முதுகின் தசைகளை உறுதிபடுத்துவடன், மெருகேற்றி அழகிய‌ வடிவம் அளிக்கிற‌து. இவ்வகை பயிற்சியின் போது முதுகுபுற‌ காயங்களைத் தவிர்க்க‌ உடல் வாகினை சீராகவும், பிடித்தத்தினை உறுதியாகவும் வைத்திருக்க‌ வேண்டும்.

பைஸெப்ஸ் கெர்ள் பெஞ்ச் [Biceps curl bench]


பைஸெப்ஸ் கெர்ள் பெஞ்ச் ஒரு தனிமையான‌ பயிற்சிக்கென‌ வடிவமைக்கப்பட்ட‌ இயந்திரம் ஆகும். இதன் உபயோகமே பைசெப்ஸ்களை(புஜத்தின் முன் பகுதி) பயிற்சிக்குள்ளாக்குவதாகும். இவ்விய‌ந்திரம் பயன்படுத்த எளிதானதாகும். இருக்கைகளின் உயரத்தினை சரிசெய்வதன் மூலம் தேவையான வசதி மாற்றங்களை பயிற்சியில் பெற‌ முடியும்.

டிரைஸெப்ஸ் எக்ஸ்டென்ஷன் பார் [Triceps extension bar]


டிரைஸெப்ஸ் எக்ஸ்டென்ஷன் பாரும் ஒரு தனிமையான‌ பயிற்சிக்கென‌ வடிவமைக்கப்பட்ட‌ இயந்திரம் ஆகும். இதன் உபயோகம் டிரைஸெப்ஸ் ஐ(புஜத்தின் பின் பகுதி) பயிற்சிக்குள்ளாக்குவதாகும். இவ்விய‌ந்திரம் பயன்படுத்த எளிதானதாகும். மார்பு பகுதி மேலாகவும், முதுகு நேராகவும் மற்றும் இறுக்கமான‌ பிடித்தம் போன்றவை பயிற்சியின் போது கவனத்தில் கொள்ள‌ வேண்டும்.

இதுபோல‌ பல உடற்பயிற்சி கருவிகள் மற்றும் இயந்திரங்களும் ஒவ்வொரு தொழில்முறை உடற்பயிற்சி மையத்திலும் காணப்படும் . இப்போது, பொதுவான உடற்பயிற்சி உபகரணங்களின் பெயர்களைத் தெரிந்திருப்பீர்கள். நிச்சயமாக உங்களின் உடல் பயிற்சி, குறிப்பிட்ட உடல் பகுதிக்கான‌ தேர்ந்த‌ இயந்திரம் மற்றும் பயன்பாடு பற்றி புரிந்திருக்கும்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.