Food that fight against Cancer
ஆரோக்கியம்

Food that helps you to fight against cancer

Food that helps you to fight against cancer

.

உடல் ஆரோக்கியத்தினை கவனமாக‌ பராமரித்து வரும் பலரும் பயம்கொள்ளும் நோய் ! புற்றுநோய்!. உலக‌ நாடுகளில் மரணத்தினை அதிக‌ அளவில் ஏற்படுத்தும் ஒரு முக்கிய நோயாக‌ உள்ளது. சமீபத்திய தசாப்தங்களில் பல மருத்துவ‌ முன்னேற்றங்கள் இருந்தாலும், புற்றுநோய் சிகிச்சை பல நிலைப்பட்ட‌ கூட்டு அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு அல்லது கீமோதெரபி போன்ற‌ அபாயகரமான‌ சிகிச்சைகளைக் கொண்டது.

உணவு மற்றும் புற்றுநோய் தாக்கும் அபாயத்தை குறைக்கும் வழிகள்?

நல்ல செய்தி என்னவென்றால் எளிய உணவு பழக்க‌ மாற்ற - வாழ்க்கை முறையை தேர்ந்தெடுக்கும் பட்சம், புற்றுநோய் தாக்கும் அபாயத்தை குறைக்க முடியுமென்பதே. புற்று நோய் எதிர்ப்பு உணவுகளை நம் தினசரி சாப்பாட்டினில் சேர்த்துக்கொள்ள‌ வேண்டும்.


Cauliflower fight against cancer


குறுக்குவெட்டு காய்கறிகள் (Cruciferous vegetables)

குறுக்குவெட்டு காய்கறிகள் ஊட்டச்சத்து மிகுதியான‌ காய்கறி குடும்பதினைச் சேர்ந்தது. இதில் பூக்கோசு (broccoli) , காலிஃபிளவர் (cauliflower), மற்றும் காலே போன்ற காய்கள் அடங்கும்.

ஏன்? பல ஆய்வுகளின் மூலம் கிடைத்த தகவலின்படி, குறுக்குவெட்டு காய்கறிகளில் காண‌ப்படும் கந்தக கலந்த‌ சல்ஃபராபேன் (sulforaphanes) சேர்மங்கள் புற்றுநோயினை எதிர்த்து போராடி உடல் எதிர்ப்புசக்தித் திறனை அதிகரிக்கச்செய்து புற்றுநோய்க்கு காரணமாக பொருட்களை உடலிலிருந்து அகற்றுவதாக‌ கண்டறியப்பட்டுள்ளது.

சதைப்பற்றுள்ளக் கனிகள் (Berries)

Berry fruits fight against cancer


சதைப்பற்றுள்ளக் கனிகள் (Berries) நிரூபிக்கப்பட்ட புற்று நோய் எதிர்ப்பு குணங்கள் கொண்ட மற்றொரு உணவு வகை. வெளிப்படையாகக் கூரவேண்டுமானால் புற்றுநோய்க்கு எதிரான உணவினில் ருசித்துச் சாப்பிட‌ வழிசெய்யும் உணவினில் ஒன்று.

ஸ்ட்ராபெர்ரி, செர்ரிகளில், அவுரிநெல்லிகள், மற்றும் அகாய் பெர்ரி பழங்கள் இந்த‌ உணவு வகையினில் அடங்கும். இந்த ஒப்பற்ற உணவு வகையினில் அந்தோசயானின்கள் (anthocyanins) போன்ற ஆக்ஸிஜனேற்ற கலவைகள் மிகுதியாக‌ உள்ளன‌.

வீரியம் மிக்க புற்று கட்டிகளில் இரத்த ஓட்டத்தை குறைத்தும் மற்றும் புற்றுநோய் செல் இறப்பினை ஊக்கப்படுத்தியும் புற்றுநோயை எதிர்த்து போராடும் திறனுக்காக‌ நன்கு அறியப்பட்டவை பெர்ரிகள். பல்வேறு சோதனைகளில் இவை உணவுக்குழாய், குடல் மற்றும் தோல் புற்றுநோய்களுக்கு எதிராக பயனுள்ள உணவாகக் கண்டறியப்பட்டுள்ளது.

தக்காளிகள்(Tomatoes)

Tomatoes fight against cancer


தக்காளி காலனித்துவமயமாக்கத்தின் (colonization) போது வட அமெரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்கு கொண்டு வரப்பட்டது. இப்போது உலகில் கிடைக்கப்பெறும் புதிய மற்றும் பழைய சமையல்வகைகளில் இவை நிறையவேப் பயன்படுத்தப்படுகிறது. தக்காளி சாப்பாட்டில் எளிதில் சேர்க்கப்படும் பொருள் மட்டுமல்ல, அவற்றில் லைகோபீன் எனப்படும் ஆக்சிஜனேற்றப் சேர்மத்தினை அதிக அளவில் கொண்டது. இவை புற்றுநோய்க்கு எதிரான உணவுகளில் ஒரு முக்கிய பங்குவகிக்கிறது.

பச்சைக் கீரைகள் (Leafy Green Vegetables)

பச்சை இலை கீரை வகைகள், சாலடுகள், சூப்கள், பாஸ்தா உணவுகளில் பயன்படுத்துவதால் அவை புற்று நோயை எதிர்க்கும் நன்மைகளை உங்களுக்குத் தரும்.

ஏனெனில் லுடீன் (lutein) போன்ற ஆக்ஸிஜனேற்ற கலவைகள், நார்ச்சத்து மிகுந்த‌ வைட்டமின்கள் கொண்ட‌ தனிப்பட்ட கலவை ஆகும். ஆய்வுகள், லைகோபீன் (lycopene) நிறைந்த உணவுகள் வாய் மற்றும் தொண்டை புற்றுநோய் அபாயத்தினை தவிர்க்கும் என்று காட்டுகின்றன.

உள்ளி வகைகள் (Alliums)

Alliums fight against cancer


உள்ளி குடும்பத்தினைச் சேர்ந்த‌ வெங்காயம், பூண்டு, வெங்காய இனப்பூண்டு போன்ற உணவுகள் அடங்கும். உலகம் முழுவதிலும் உள்ளிகள் உணவில் பெரும் சுவை சேர்க்கப் பயன்படுகின்றன‌. மேலும் அவை வலுவான எதிர்ப்புசக்திமிக்க‌ ஆக்சிஜனேற்றப் பண்புகள் மற்றும் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட அலிசின் (allicin) என்ற‌ கலவையைக்கொண்டது, ஆய்வுகள், அல்லிசின் (allicin) உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கார்சினோகிராஃபிக் பொருட்களை தடுக்கும், மேலும் புற்றுநோய் செல்கள் பெருகுவதை தடுப்பதன் மூலம் புற்றுநோய்க்கு எதிராக‌ போராட உதவும் உணவாக‌ நிரூபிக்கப்பட்டுள்ளது.

புற்று நோய் தாக்கத்தினை தடுக்க‌ இயலாது எனினும் நமது பழக்கவழக்கத்தினில் மாற்றங்கள் செய்வதினால் புற்றுநோய் தாக்கும் அபாயத்தினை குறைக்க‌ முடியும்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.