ஆரோக்கியம்

Best food to reduce fat in our body

.

வெண்டைக்காயை (பொரியல்) பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. சிலர் பச்சையாக விருப்பப்பட்டு சாப்பிடுவார்கள். காய்கள் என்றாலே ஓட்டம் ஓடும் குழந்தைகள், வெண்டைக்காய் பொறியல் என்றால் அதனை விரும்பி சாப்பிடுவதை நாம் பார்க்கலாம். இப்படி ருசித்து சாப்பிடும் வெண்டைக்காயில் இருக்கும் கொழ கொழ பகுதி யாருக்குமே பிடிப்பதில்லை.

அதனை சமைக்கும் போது சில‌ நிமிடங்கள் வதக்கினால் அந்த கொழகொழப்பு போய்விடும்தான். ஆனால் அந்த கொழகொழப்பினால் உடலுக்கு நிறைய நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அப்படி அந்த‌ கொழகொழவென‌ இருக்கும் காயினால் என்ன‌ பலன்?. இதைப் பற்றி தொடர்ந்து படியுங்கள்.

Low Sodium Fruits ans Vegetables


ஒரு கப் பச்சை வெண்டைக்காயில் எவ்வளவு சத்து உள்ளது எனத் தெரியுமா?

கலோரி -30
நார்சத்து-3கிராம்
ப்ரொட்டீன்-2 கிராம்
கார்போஹைட்ரேட்-7.6
கொழுப்பு-0.6 க்
விட்டமின் சி-21 மில்லி கிராம்
மெக்னீசியம்-60 மி.கிராம்.

இந்த சிறிய‌ அளவுடைய‌ பிஞ்சு வெண்டைகாய் மருந்து மாத்திரைகளால் சரி செய்ய முடியாத பெரிய பெரிய வியாதி எல்லாம் குணப்படுத்தும், கட்டுபடுத்தும் என்பதுதான் ஆச்சரியமான செய்தி.
ஆஸ்த்மா, கொலெஸ்ட்ரால், கிட்னி பாதிப்பு, ஆகியவற்றை ஏற்படாமல் தடுக்கிறது.மேலும் நோய் எதிர்ப்புதிறனை அதிகரிக்கச் செய்கிறது.

வெண்டைக்காயை தொடர்ந்து சாப்பிட‌ ; சர்க்கரை வியாதி இருப்பவர்கள், சிறு நீர கோளாறினை தடுக்க முடியும்; கிட்னி தொடர்பாக வரும் வியாதியும் அண்டாது. பெண்கள் கர்ப்பகாலத்தில் கட்டாயம் சாப்பிட வேண்டிய‌ உணவு. வெண்டைக்காயில், விட்டமின் ஏ, பி1, பி2, ப்6 மற்றும் சி மற்றும் நார்சத்தும் உள்ளன.

வெண்டைக்காயினால் நோய்கள் வராமல் தடுக்கும் நிறைய‌ மருத்துவ‌ குணங்கள் உள்ளன‌. உடல் பருமனைக் குறைக்கும். சருமத்தை அழகாக்கும். உங்கள் உடல் ஆரோக்கியத்தினை நீங்கள் தான் பேண‌ வேண்டும்ம். நீங்கள் எடுக்கும் முடிவினில் தான் அது உள்ளது. இப்படி எல்லாவிதத்திலும் நன்மை தரும் வெண்டைக்காயை தினமும் எடுத்துக் கொள்ளுங்கள்.ஆரோக்கியமாக‌ இருங்கள்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.