கிராம்பு கலந்த மூலிகை டீ குடித்தால் கிடைக்கும் நன்மைகள்
ஆயத்த வாழ்வினை வாழ்ந்து கொண்டிருக்கும் ந்ம்மில் பலரும் அனுபவப்படும் விஷயம் உடல் சோர்வுத் தன்மை. இதற்காகப் பெரும்பாலானோர் சோர்வுத் தன்மை நீங்கி சுறுசுறுப்பாக இருப்பதற்காக அடிக்கடி டீயை குடிப்போம். அதிக அலவில் டீ குடிப்பதும் ஆபத்து தான். இதற்கு மாற்றாக உடலுக்கு ஆரோக்கியமான கிராம்பு கலந்த மூலிகை டீயை பருகலாம். இதனை டீக்கு பதிலாக சில நேரங்களில் பருகலாம்.
கிராம்பு கலந்த மூலிகை டீ செய்முறை
ஒரு கப் தண்ணீரில் ஐந்து கிராம்பினை இட்டு நன்றாக கொதிக்க வைத்து விடுங்கள், பின் அந்த நீரை பருகலாம். இந்த கிராம்பு டீயில் விட்டமின் சத்துக்கள் ஏராளமாகக் காணப்படுகிறது.
நன்மைகள் : கிராம்பு கலந்த மூலிகை டீ குடிப்பதனால்
தலைவலி, உயர்ரத்த அழுத்தம், வயிற்று செரிமானப் பிரச்சனை, கல்லீரல் குறைபாடு போன்ற பிரச்சனைகளைத் தடுத்து, பற்கள் பிரச்சனை, சீரிய ரத்தோட்டம் தந்தும், இதயம் போன்ற உறுப்புக்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
பல் வலி இருப்பவர்கள் இந்த கிராம்பு கலந்த மூலிகை டீயை பருகும்போது மிதமான சூட்டில் குடிப்பது நல்லது!