புதிய எக்ஸ்பாக்ஸ் வயர்லெஸ் ஹெட்செட் மார்ச் 16ல், $ 99 க்கு : மைக்ரோசாப்ட் அறிவிப்பு
மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய எக்ஸ்பாக்ஸ் வயர்லெஸ் ஹெட்செட்டை $ 99 டாலருக்கு { இந்திய மதிப்பில் ரூ. 7300) , அடுத்த மாதம் அறிமுகப்படுத்துகிறது. இது எக்ஸ்பாக்ஸ் 360 டேஸ் (Xbox 360 days) பிறகு முதல் வயர்லெஸ் எக்ஸ்பாக்ஸ் ஹெட்செட் (first wireless Xbox headset) ஆகும், மேலும் இது எக்ஸ்பாக்ஸ் ஒன் மற்றும் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் / எஸ் கன்சோல்கள் (Xbox One and Xbox Series X / S consoles), பிசிக்கள் மற்றும் மொபைல் சாதனங்களுடன் புளூடூத் வழியாக இணைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிய எக்ஸ்பாக்ஸ் வயர்லெஸ் ஹெட்செட், 40எம்எம் டிரைவர்கள், பேப்பர் கம்போசிட் டையபிராம் மற்றும் நியோடிமியம் மேக்னெட் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது
இந்த புதிய எக்ஸ்பாக்ஸ் வயர்லெஸ் ஹெட்செட் பிளெயின் பிளாக் பினிஷ் நிறத்தில், கேமிங் சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளது.மேலும் இது பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. அவை,
- 20Hz முதல் 20000Hz ரெஸ்பான்ஸ் ரேன்ஜ்
- பவர்/பேர் பட்டன், மியூட் பட்டன், இடது மற்றும் வலதுபுற இயர்கப் மீது டையல்கள் வழங்கப்பட்டுள்ளன.
- வலதுபுற டையல் வால்யூம் கண்ட்ரோலர்களாக உள்ளது.
- இதில் உள்ள மைக் ட்விஸ்ட் செய்யக்கூடிய பூம் வடிவமைப்பு உள்ளது
- ப்ளூடூத் 4.2 மூலம் விண்டோஸ் 10 சாதனங்களுடன் இணைந்து கொள்கிறது.
- யுஎஸ்பி டைப் சி கேபில் அல்லது எக்ஸ்பாக்ஸ் வயர்லெஸ் அடாப்டர் மூலம் பயன்படுத்தலாம்.
- யுஎஸ்பி டைப் சி போர்ட் கொண்டு ஹெட்செட் சார்ஜ் செய்துகொள்ளலாம்.
- 15 மணி நேர பேக்கப் வழங்கும் பேட்டரி கொண்டுள்ளது. இதனை 30 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் நான்கு மணி நேரத்திற்கான பேக்கப் பெற முடியும்.
- முழுமையாக மூன்று மணி நேரங்கள் சார்ஜ் செய்தால் போதும்.