ஆப்பிளின் வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள், புது ஐபோன்களில்???

Apple-Airpod
Gears

New Apple iPhone don't have headphone jacks

நாம் ஐபோன் (Apple iPhone) பரிணாமத்தில் ஒரு குறிப்பிட்ட‌ இடத்தை அடைந்துள்ளோம். ஆப்பிள் அண்மையில் ஐபோன்-7, ஐபோன்-7 பிளஸ் ( iPhone 7 and iPhone 7 Plus) ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இந்த‌ ஐபோன்களில் ஹெட்போனை சொருகும் துளையின்றி ((Headphone Socket)) வடிவமைத்துள்ளது ஆப்பிள் நிறுவனம்..

இப்போது ஐபோன் ஒலியை கேட்பதற்கு இரண்டு வழிகள். லைட்னிங் கனெக்டர் மற்றும் வயர்கள் இல்லாத ப்ளுடூத் ஹெட்போன்கள். இந்த இரண்டையும் விலைகொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு வாடிக்கையாளர் ஆளாகியுள்ளனர். இந்தக் கருவிகளையும் ஆப்பிள் நிறுவனமே விற்பனை செய்கின்றது என்பதால், இதன்மூலம் பயன்பெறப் போவதும் ஆப்பிள் நிறுவனமேதான் என‌ விமர்சகர்கள் குற்றம் கூறுகின்றனர்.

காசேதான் கடவுளடா ??????? ஐபோனுக்கும் இது பொருந்துமடா !!!

ஹெட்போன் சாக்கட் இல்லாத‌ (Headphone Socket) ஐபோன் வடிவமைப்பு ஆப்பிளின் வியாபார தந்திரம் என்று விமர்சிக்கின்றனர். மேலும் ஐபோன் கருவியை சார்ஜ் (device is charging.) செய்யும்போது பாடல்களைக் கேட்க‌ (listening to music) முடியாது. இதனால் பல‌ விமர்சனங்களுக்கு ஆப்பிள் ஆளாகியுள்ளது.

இதற்கென‌ பிரத்யேகமாக ஐபோன் லைட்டிங் டாக் (iPhone Lightning Dock) என்ற‌ வயர்லெஸ் கணேக்டரினை $ 49 கொடுத்து (Lightning connector) வாடிக்கையாளர்கள் பெறலாம் என‌ ஆப்பிள் கூறியுள்ள‌து. ஐபோன் லைட்டிங் டாக் (iPhone Lightning Dock) மூலம் அனைத்து ஐபோன்களையும் சார்ஜ் (Charge iPhone) மற்றும் சின்க் (Sync) செய்துகொள்ள‌லாம். iPhone Lightning Dock ஐ கணெக்ட் செய்வதன்மூலம் தடையில்லாமல் இசை கேட்கலாம் மற்றும் ஸ்பீக்கர் போன்கால்கள் (speakerphone calls) போது தெளிவான ஆடியோவினையும் அனுபவிக்க‌ முடியும்.

புதிய போன்கள் பெட்டியில், ஒரு ஜோடி காதணியைக்கொண்டு (earbuds) லைட்னிங் போர்ட் வழியாக இணைக்கப்பட்டு டிஜிட்டல் (Digital) வடிவில் துல்லியமான ஒலியினைக் கேட்க முடியும். அதே போல் ஹெட்ஃபோன்களை கணெக்ட் செய்வ‌தற்கு அடாப்டர் ஒன்றும் பெட்டியில் காணப்படும்.

இதுவரை அறிமுகமான‌ ஆப்பிள் மற்றும் அனைத்து நிறுவன‌ ஃபோன்களிலும் இணைக்கப்பட்ட‌ அனாலாக் ஹெட்போன்களை (Analog Headphone) மாற்றி அமைத்ததன் மூலம் பேட்டரி கொள்ளளவை அதிகரித்து, போனின் பயன்பாட்டு நேரத்தையும் கூட்டலாம் என ஆப்பிள் கூறுகிறது.

புதிய வயர்லெஸ் (Wireless / கம்பியில்லா) ஹெட்ஃபோன்கள் உயர் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இசை கேட்கவும், கைபேசி அழைப்புகள் மற்றும் சிரியுடன் தொட‌ர்பு கொள்ளவும் வழி செய்கின்றன‌.

குறிப்பு : சிரி (ஆங்கிலம்: Siri) என்பது ஐபோன் ஸ்மார்ட்போன்களுக்கான செயற்கை நுண்ணறிவுத் திறன் (intelligent personal assistant and knowledge navigator,) கொண்ட ஒரு மென்பொருளாகும்.

நாள் : 09.09.2016 திருத்தம் : 21.09.2016

புதியவை / Recent Articles