ஆப்பிள் ஐபோன் 7; ரூ. 60 ஆயிரம்; இந்தியாவில் ..

Apple launches iPhone 7 in India starting from Rs 60 thousands for base models

ஆப்பிள் தனது ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் (iPhone 7 Plus) ஸ்மார்ட்ஃபோன்களை சமீபத்திய மறு செய்கைக்குப்பின் இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதன்படி ஆப்பிள் நிறுவனம் அடிப்படை ஐபோன் மாடலுக்கு ரூ 60,000 (Base Models) ஆரம்ப விலையை அறிவித்துள்ளது. வரும் அக்டோபர் 7 ஆம் முதல் இந்தியாவில் ஐபோன் 7 கைபேசிகள் விற்பனை தொடங்க உள்ளது. ஆப்பிள் இன்னும் மற்ற மாடல்களுக்கான‌ விலையினை அறிவிக்கவில்லை.

அமெரிக்காவில், ஐபோன் 7 உயர்மட்ட‌ நுழைவு நிலை (entry level, high end) மாடலின் விலை $ 650 (இந்திய‌ ரூ .43,000) ஐபோன் 7 பிளஸ் $ 849 (இந்திய‌ ரூ 56,000) விலையாகின்றன‌. புதிய அம்சங்களில், முந்தைய மாடல்களில் காண‌ப்பட்ட‌ 16 ஜிபி சேமிப்பு இடத்திற்கு (starting storage space) மாறாக‌, 32 ஜிபி யில் இருந்து சேமிப்பு இடத்தை வழங்குகின்றது. மேலும் 128GB அல்லது 256GB ஐபோன் மாடல்களையும் பெற‌ முடியும்.

ஐபோன் 7 ( iPhone 7), 4 கோர், 64 பிட், A10 பியூசன் பிராசசர் (four core, 64-bit, A10 fusion processor) மற்றும் 4.7 அங்குல‌ (4.7 inch screen)1334*750 ரெசலூஷன் (1334*750 resolution) திரையுடன் வெளிவருகிறது.

மற்ற புதிய அம்சங்களாவன‌ பின்பக்க‌ இரட்டை கேமராக்கள் (dual-back cameras) (Android தொலைபேசிகளில் 2014 முதல் வெளியாகின‌), நீர் மற்றும் தூசி எதிர்ப்பு பூச்சு (water and dust resistant finishing in Apple iPhone7) மற்றும் பழைய‌ பட்டனுக்கு பதிலாக‌ ஒரு தொடு உணர் பகுதி (touch sensitive area instead of a button) சேர்க்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் தனது தரனிலை ஹெட்ஃபோன்களுக்கான‌ (standard headphones) ஒரு அடாப்டரினை, வாங்கும்போது போனுடன் அட்டை பெட்டியில் வழங்கினாலும் புதிய போன்களில், ஹெட்ஃபோன் ஜாக்குகளுக்கு (Headphone jacks) பதிலாக‌ ஒரு லைட்னிங் அடாப்டர் ( lightning adapter )யும் வழங்குகிறது.

இத்துடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் அறிமுகம் ஆகின்றன‌. கருப்பு மற்றும் ஜெட் பிளாக் (iPhone – Black and Jet Black)- என‌ இரு புது நிறங்கள் ஐபோனில் அறிமுகப்படுத்தியுள்ள‌து. அழைப்புகள், இசை கேட்க‌ மற்றும் சிரி உடன் தொடர்புகொள்வதற்கான எயர்பாட் (AirPods) எனும் புளூடூத் காதணிகளை (bluetooth earphones) $150 விலையில் வழங்குகிறது. இதனை ஒயர்லெஸ் ஹெட்செட்டாக‌ (wireless headset)பயன்படுத்திக்கொள்ளலாம்.

நாள் : 10.09.2016 திருத்தம் : 21.09.2016

புதியவை / Recent Articles