Kindle supports Tamil language
Gears

Amazon's Kindle and Kindle Android and iOS apps to support Hindi, Tamil, Marathi, Gujarati and Malayalam in India.

அமேசான் நிறுவனம், இந்தி, தமிழ், மராத்தி, இந்தியாவில் குஜராத்தி மற்றும் மலையாளம் ஆகிய‌ மொழிகளுக்கு ஆதரவு தரும்படி கிண்டில் டேப்லட்டுகள் (Kindle Tablets) மற்றும் அண்ட்ராய்டு மற்றும் iOS பயன்பாடுகளை (Kindle Android, iOS Apps) தற்போது மேம்படுத்தல் செய்துள்ளது.

கின்டெல்லில் உள்ள‌ இந்திய மொழி மின்புத்தகங்களில் (Indic Language Ebooks) சில பிரத்தியேக தலைப்புகள் (பதிப்புகள் / special titles) தாங்கிய‌ புத்தகங்கள் இப்போது கிடைக்கின்றன‌. அமேசான் நிறுவனம் எதிர்காலத்தில் இன்னும் பல‌ தலைப்புகளைச் சேர்க்க திட்டமிட்டுள்ளது.

தற்போது, கின்டெல் இ-ரீடர் (Kindle e-reader) ஆங்கில புத்தகங்களின் மொழிபெயர்க்கப்பட்ட‌ பதிப்புகளையும் வழங்கி வருகின்றது. இப்போது வரை, கின்டெல் 4 மில்லியன் புத்தகங்களையுடைய‌ ஒரு நூலகத்தை கொண்டுள்ளது (library of 4 million books) என‌ அமேசான் கூறுகின்றது.

தற்போது, கிண்டில் இ-ரீடர் மற்றும் கிண்டில் பயன்பாடுகள் (Kindle apps), ஆங்கிலம், சீனம், ஜெர்மன், பிரஞ்சு, ஜப்பனீஸ், Gaelician, டேனிஷ், பின்னிஷ் முதலிய மொழிகளுக்கு (kindle supports these languages) ஆதரவளிக்கின்றன‌.

அமேசான் தான் ஆதரிக்கும் மொழிகளைத் தவிற்று மற்ற மொழிகளில் உள்ள‌ புத்தகங்களை ஒழுங்காக காண்பிக்க முடியாது எனும் காரண‌த்தினால் அதனை நீக்கவும் செய்யும் என‌ அதன் உதவி பக்கத்தில் (Amazon Help Page) கூறுகின்றது.

அமேசான் மேலும், எழுத்துரு அளவு சரிசெய்தல், குறிப்புகள் சேர்த்தல், சிறப்புப் பொருள் குறித்தல் () மற்றும் தானாக சேமிக்கும் வசதிகளை அனைத்து கிண்டில் பயன்பாடுகள் மற்றும் கருவிகளிலும் (Kindles and Kindle apps.) முன்னதாக‌ வாசித்த‌ பக்க ஒத்திசைவையுடன் (syncing the last read page) இணைந்து வழங்க‌ உள்ளது.