Samsung cinema theater screen
Gears

Samsung unveils new Cinema Screen, a new cinema theater screen display will be the world’s first High Dynamic Range (HDR) LED theatre display.

சிறந்த ஸ்மார்ட்போன்கள் மற்றும் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கென‌ அறியப்படும் சாம்சங் நிறுவனத்தின் சமீபத்திய முயற்சியானது திரையுலக துறையினை நோக்கியதாகும். நிறுவனம் சினிமா திரையரங்குகளுக்காக‌ வடிவமைக்கப்பட்டுள்ள அதன் புதிய சினிமா திரையினை வெளியிட்டுள்ளது. சாம்சங் நிறுவனம் சினிமா திரையரங்குகளுக்காக‌ பிரத்யேகமாய் வடிவமைக்கப்பட்ட‌ அதன் புதிய‌ தயாரிப்பான‌ (பிராண்ட்) சினிமா திரையினை 'சினிமா ஸ்கிரீன்' எனும் பெய‌ரில் வெளியிட்டுள்ளது.

முதலாவது தியேட்டர் அளவிலான உயர் டைனமிக் LEDயாலான‌ சினிமா திரையானது முன்பு கண்டிராத‌ "உயர் துடிப்புமிக்க‌ துல்லியம்" உடன்கூடிய‌ "முன்கண்டிராத படம் தரமும்" உறுதிபடும் விதம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நவீனயுக‌ பிரம்மாண்ட‌ பொழுதுபோக்கிற்கேற்றவாறு நவீன திரையரங்குகளின் பரிமாணங்களில் பொருத்தவும், 4K ரெஸ்லூஷன் (4,096 எக்ஸ் 2,160 பிக்சல்கள்) மற்றும் அற்புதமான காட்சித்தரம் வழங்கும்படி வடிவமைக்கப்பட்டதாகும் இந்த‌ புதிய திரைக் காட்சி தொழில்நுட்பம்.