வெளியிட்ட தேதி : 02.02.2017
Piaggio built Gita, a cargo-carrying robot
Gears

Piaggio built Gita, a cargo-carrying robot carry up to 40 pounds at a time and has a maximum speed of 22 miles per hour.

>

நீங்கள் ஷாப்பிங் செய்த‌ பொருளையோ அல்லது உங்களுக்குத் தேவையான‌ பொருட்களையோ இனி சுமந்து வரத் தேவையில்லை. இந்த‌ பிரச்சினைக்கு தீர்வாக பியாஜியோ (Piaggio) நிறுவனம் புதிய ரோபோ ஒன்றினை உருவாக்கியுள்ளது. பியாஜியோ, வெஸ்பா ஸ்கூட்டர் மற்றும் மோட்டோ குஸி மோட்டார் சைக்கிள்களை (Vespa scooters and Moto Guzzi motorcycles company ) தயாரித்து வழங்கும் இத்தாலிய நிறுவனம் ஆகும்.

கீதா (Gita) என‌ பெயர்பெற்ற‌ இந்த‌ தனிப்பட்ட விநியோக கருவி அல்லது "சரக்கு ரோபோ (cargo robot)" தானாகவே நகர்ந்து செல்லக்கூடிய வகையிலும், ஒருவரைப் பின்தொடர்ந்து செல்லக்கூடிய வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கீதா (Gita) கார்பன் ஃபைபரால் ஆன‌ பந்து போன்ற‌ வடிவத்தில் டயர்கள் பொருத்தப்பட்ட‌தைப் போல‌ தோன்றும். பல்வேறு கேமராக்கள் அதன் ஓட்டினுள் உட்பொதிக்கப்பட்டிருக்கும்.
26 அங்குல உயரம் வரை உள்ள, கீதா ரோபோ சுமார் 40 பவுண்டுகள் வரை தூக்கிச் செல்ல‌ முடியும். மற்றும் மணிக்கு 22 மைல் வேகத்தில் நகருவதால் ஷாப்பிங் செய்பவருடன் நடை பயணமாகவோ அல்லது டூவீலர்களின் பின்னாலோ தொடர்ந்து செல்ல‌ முடியும்.

பியாஜியோவால் உருவாக்கப்பட்ட‌ கீதா ரோபோவானது பாதுகாப்பாக வெளியே நிறுத்தவும் முடியும். லாக் செய்யும் வசதி கொண்ட‌ கீதா, கைரேகை ஸ்கேன் மற்றும் அதன் லாக்கினை திறப்பதற்கான‌ இரகசிய‌ குறியீடும் (fingerprint scan and a code to open it) தேவைப்படுகின்றது.

அடுத்த ஆறு மாதங்களில், பியாஜியோ வெவ்வேறு கல்லூரி வளாகங்களிலும் மற்றும் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் கீதாவை வைத்து பைலட் சோதனைகளை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த‌ ரோபோவின் விலை தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.