Gears

iPad-like ‘Apple Mirror’ -- Created by designer Rafael Dymek, the ‘Apple Mirror’

ஆப்பிளின் ஐபேட் (Apple iPad-like) போன்று செயல்படும் முகம் பார்க்கும் கண்ணாடியை (Mirror) ராஃபேல் டீமெக் (Created by designer Rafael Dymek) என்பவர் உருவாக்கியுள்ளார்.

டேப்லெட்டுகள் (Tablet) அறிமுகப்படுத்தப்பட்ட‌ காலத்தில் வெகுவாக‌ மக்களிடையே சிறந்த‌ ஒரு பொருள் என‌ பெயர்பெற்றவை. ஆனால் இன்றைய‌ நாட்களில் டேப்லெட்டுகளின் பயன்பாடு என்பது மிகச்சிறிய‌ அளவே. இன்றோ முகம் பார்க்கும் கண்ணாடியிலும் பெரிதாய் காண்பிக்கும் அளவிற்கு நுட்பமானது இடம்பெயர்ந்துள்ளது.

ராஃபேல் டீமெக்கால் உருவாக்கப்பட்ட‌ "ஆப்பிள் மிரர் (Apple Mirror)" நிச்சயமாக‌ மக்களிடையே ஒரு போதையினை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. ஆப்பிளால் இது தயாரிக்கப்படவில்லை என்றாலும் இது ஆப்பிள் மாதிரியைத் தழுவி உருவாக்கப்பட்டதாகும். ஆகையினால் நிச்சயமாக‌ ஆப்பிளால் ஈர்க்கப்படும்.

ஆப்பிள் iOS10 (Apple iOS) போன்று உங்களின் ஐஃபோன்களில் காணப்படும் ஐக்கான்களையும் (iPhone like icons) கொண்டது. ஐபோன் போல‌ டெக்ஸ்ட் (Text), இன்டர்னெட் உலாவி (Internet Browser), திரைப்படம் பார்த்தல் மற்றும் ஊபர் காரினையும் உங்களால் புக்கிங் செய்யவைக்கும் பல‌ சிறப்பம்சங்களைக் கொண்டது இந்த‌ அற்புதக் கண்ணாடி

முற்றிலுமாக‌ தொடுதிரையைச் சார்ந்து வேலை செய்யும் இந்த‌ அழகு பார்க்கும் கண்ணாடியை (Make-up Mirror) செயல்பட வைக்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்னவென்று தெரியவில்லை. ஆப்பிளின் கருவிகளைப் போன்று செயல்படும் இந்த‌ கண்ணாடி 45 நிமிடத்திற்கு செயலற்று இருந்தால் தானாகவே செயல்பாடுகளை நிறுத்தியும் கொள்கின்றது (Shuts automatically after 45 minutes inactivity).

இந்த உருவாக்கம் குறித்து முழுமையான‌ செயல்படு விபரம் தெரியவில்லை என்றாலும் வீடியோவில் உள்ளதைப் போன்று நிஜப்பொருள் தயார்செய்யப்படுமானால் கண்டிப்பாக‌ அனைவரும் இதைத்தான் முதலில் வாங்கிக்கொள்ள‌ ஆர்வம் காட்டுவர்.

குறிப்பாக‌ பெண்கள், ஏனெனில் அவர்கள்தான் கண்ணாடியை விட்டு நகர‌ மாட்டார்களே !!!!!.