HD ஆடியோவை கேட்க‌ வைக்கும் EGGO வயர்லெஸ் மொட்டுகள்

EGGO minimalist wireless earbuds
Gears

EGGO minimalist wireless earbuds provide HD Audio, ergonomic comfort, anti-shedding, as well as a built in microphone and charging pod.

காலங்கள் செல்ல‌ செல்ல‌ புதுப்புது தலைமுறைகளைக் கொண்ட‌ யுக‌ங்களை நாம் சந்திக்க‌ நேரிடுகின்றது. இன்று எலக்ட்ரானிக் என்பது நம் வாழ்வின் உயிராகி மாறிவருகின்றது. எலக்ட்ராணிக் கருவிகளின் பரிணாம‌ வளர்ச்சிகள் இயல்பாய் நிகழ்ந்து கோண்டே இருக்கும். இன்று வயர்லெஸ் கருவிகள் / உதிரிபாகங்கள் என்பன‌ எலக்ட்ராணிக் உலகின் புதுமைப் படைப்புகளாய் ஆக்கிரமித்து வருகின்றன‌.

இத்தொழில்நுட்பம் ஹேன்ட் ப்ரீக்களையும் (HandFree) விட்டுவைக்கவில்லை. ஐக்கிய இராச்சியத்தைச் (யு.கே) சார்ந்த‌ WOHO Ideas நிறுவனம் வயர்லெஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய‌ EGGO என்றழைக்கப்படும் சிறிய வயர்லெஸ் earbudsகளை வடிவமைத்துள்ளது. இவை வயர்களைக் கொண்டிராதலால் Earbuds (இயர்ஃபட்ஸ்) என அழைக்கப்படுகின்றன‌. கீழேயுள்ள‌ வீடியோ பாருங்கள் புரியும்.

HD ஆடியோவுடன், பணிச்சூழலியல் தொந்தரவுகள் இன்றி இலகுவாக பயன்படுத்தக்கூடியதாகவும், உதிரும் தன்மை அற்றனவாகவும் வடிவமைக்கப்பட்டன‌. அத்துடன் உள்ளமைக்கப்பட்ட‌ மைக்ரோஃபோன் (மைக்) மற்றும் சார்ஜிங் செய்யும் பாகமும் கொண்டுள்ளது சிறப்பாகும்.

Kickstarter தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள இந்த EGGO Earbuds இன் விலை 96 பவுண்ட்களில் (£96) இருந்து அதிகபடியான‌ விலைகளிலும் கிடைக்கப்படலாம் என தெரிய‌ வருகின்றது.

நாள் : 31.01.2017 திருத்தம் : 31.01.2017