வெளியிட்ட தேதி : 19.01.2017
700 Galaxy Bike
ஆரோக்கியம்

700bike Galaxy : The sexiest folding bike saves your space at home, garage and office

ஒருகணம் நினைத்து பாருங்கள், உங்களது சைக்கிள், வீட்டில், கேரேஜ் அல்லது அலுவலகத்தின் உள்ளேயோ வைத்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளதா?. இந்த‌ அட்டகாசமாக‌ மடிந்துகொள்ளும் சைக்கிள் உங்களுக்கு இந்த‌ வசதியினை ஏற்படுத்திக் கொடுக்கும். இடத்தினையும் பெரிதாய் சேமிக்க‌ முடியும். சுரங்கப்பாதை, கார்கள் நெரிசல், மாடிப்படி என‌ எளிதில் தூக்கிச் செல்லவும் முடியும்.

பல்வேறு ஸ்டைல்கள் மற்றும் விலையில் கிடைக்கின்ற‌ இந்த‌ சைக்கிள்களை 700(Beijing)Technology and Development Co., Ltd. நிறுவனம் 700பைக்ஸ் என்கின்ற‌ பெயரில் விற்பனை செய்து வருகின்றது. நீங்கள் நீடித்த உழைப்பு, நன்கு வடிவமைக்கப்பட்ட மற்றும் நவீன‌ தொழில் நுட்பத்துடன் கூடிய‌ சைக்கிளை தேர்ந்தெடுக்க நினைப்பவரானால், நீங்கள் 700Bike இன் கேலக்ஸி சைக்கிளினை பார்க்க வேண்டும்.


சீனா, பெய்ஜிங்கை தளமாகக் கொண்டுள்ள உற்பத்தியாளரான‌ 700(Beijing)Technology and Development Co. தயாரித்துள்ள‌ இந்த‌ சைக்கிள் (பைக்) சிவப்பு புள்ளி வடிவமைப்பு விருது (Red Dot Design Award) பெற்ற நகர பைக் ஆகும். பலமிக்க‌ மற்றும் மிகவும் இலகுவான‌, உயர் தரமான உபகரணங்கள் மற்றும் ஸ்மார்ட் டிஜிட்டல் அம்சங்களுடன் உருவாக்கப்பட்ட‌ இந்த‌ பைக் ஒரு அலுமினிய ஃபிராமைக் (சட்டம்) கொண்டுள்ளது.

அதன் வகையில் மற்ற பைக்குகள் போல, அது ஃப்ரேமின் நடுவாக்கில் மடிகிறது. நீங்கள் handlebar மற்றும் பெடல்களையும் மடித்துக் கொள்ளலாம். அத்துடன் தூக்கிக்கொண்டும் செல்லலாம். இந்த‌ பைக் குறித்து அதிகமாக‌ தெரிந்துகொள்ள‌ வேண்டுமானால் வீடியோவைப் பாருங்கள்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.