மலிவு விலையில் லேப்டாப் : $ 89க்கு லினக்ஸ் லேப்டாப்?

$89 Linux laptop? This Pinebook is a low-cost Linux laptop with an ARM CPU

மலிவான விலையில் கிடைக்கும் பைன்புக் லேப்டாப்கள் ARM CPU உடன், லினக்ஸ் (Linux) இயங்குதளத்தினால் செயல்படக்கூடியவை (Pinebook, a low-cost Linux laptop with an ARM CPU). இந்த லேப்டாப்தான் முன்னர் அறிமுகமான லேப்டாப்களை விடவும் விலை குறைவானதாகவும் காணப்படுகின்றது.

பிரபலமடைந்த‌ ராஸ்பெர்ரி பை (Raspberry Pi challenger) தயாரிப்புக்கு போட்டியாய் விளங்கும் பைன் (Pine Microsystems Inc.), இரண்டு புதிய‌ லினக்ஸ் பைன்புக் மடிக்கணினிகளை (Pinebooks) அறிமுகப்படுத்தியுள்ள‌து. பைன் A64, மிக்க‌ மலிவானதும் மற்றும் ஒப்பீட்டளவில் சக்திவாய்ந்தமையால் டெவலப்பர்கள் மத்தியில் தனிப்பெயர் பெற்றது.

A64 பலகை பெற்ற‌ பைன்புக்குகள் (Pinebooks with A64 board ), ஒரு Allwinner குவாட்-கோர் ARM Cortex A53 64-பிட் பிராசஸர் கொண்டு, உபந்து, டெபியன், அல்லது அண்ட்ராய்டு லாலிபாப் 5.1 இயங்குதளங்களை (Ubuntu, Debian, or Android Lollipop 5.1) இயக்க முடியும். இந்த‌ பிராசஸர் ஆற்றலூட்டப்பட்ட‌ 11 மற்றும் 14 அங்குல Pinebook நோட்புக்குகள், முறையே $ 89 மற்றும் $ 99 எனும் விலையில், மலிவாகக் கிடைக்கின்ற மடிக்கணினிகளாக‌ (low-cost laptops) அமையலாம். டிஸ்பிளே, விசைப்பலகை, டச்பேட், சேமிப்பு, நினைவகம், மற்றும் போர்ட் என‌ ஒரு மடிக்கணினி செயல்படுவதற்குத் தேவையான அடிப்படைகளை கொண்டிருக்கும்.

இவ்விரு லேப்டாப்களும் 1280 x 720 Pixel Resolution கொண்ட‌ன என்பது குறிப்பிடத்தக்கது.

இரு லேப்டாப்களும், 2GB LPDDR3 ரேம், 16 ஜிபி eMMC 5.0 சேமிப்பு (Storage), இரண்டு USB 2.0 போர்ட்கள், 256GB கூடுதல் சேமிப்புக்கான‌ மைக்ரோ ஸ்லாட், வெளிப்புற காட்சி இணைப்புக்கு ஒரு மினி HDMI உள்ளீடு, ஹெடபோன் ஜாக், உள்கட்டமைக்கப்பட்ட மைக்ரோஃபோன் (built-in microphone), ஒரு 1.2-மெகாபிக்சல் கேமரா, மற்றும் ஒரு 10,000mAh லித்தியம் பாலிமர் பேட்டரி கொண்டியங்குகின்றன‌. Wi-Fi மற்றும் ப்ளூடூத் வயர்லெஸ் இணைப்புகளும் (Bluetooth wireless connections) அடங்கும்.

பைன்புக்கு விவரக்குறிப்பு தாள் படி (Pinebook Specification Chart) , நோட்புக்குகள் 352mm அகலமும், 233mm ஆழ, மற்றும் 18mm உயரமும் கொண்டவை. 1.2kg, அல்லது 2.65lb எடையுள்ளதாக இருக்கும்.

இன்னும், விற்பனைக்கும் வெளிவரவில்லை என்றாலும் விரும்புபவர் பெயரினை பதிவு செய்தால், விற்பனைக்கு வரும்போது அறிவிக்கப்படுவர்.

Specifications
Hardware

CPU :

RAM :

Flash:

Wireless :

USB 2.0 Port :

MicroSD Card Slot :

Mini HDMI :

Headphone Jack :

Microphone :

Keyboard :

Touch-pad :

Power :

Battery :

Display :

Front Camera :

Dimension :

Weight :

64-Bit Quad-Core ARM Cortex A53

2 GB LPDDR3 RAM Memory

16 GB eMMC 5.0

WiFi 802.11bgn + Bluetooth 4.0

2

1

1

1

Built-in

Full Size Keyboard

Large Multi-Touch Touchpad

Input: 100~240V, Output: 5V3A

Lithium Polymer Battery (10000mAH)

11" or 14" IPS LCD (1280 x 720)

1.2 Megapixels

352mm x 233mm x 18mm (WxDxH)

1.2 kg (2.65 lbs)

Software

OS :

PINE A64 supported OS

நாள் : 30.11.2016 திருத்தம் : 30.11.2016

புதியவை / Recent Articles