Nintendo-switch-console-and-gaming experience
Gears

Nintendo Switch, a new different console from the maker might make us all gamers again with new gaming experience

நிண்டெண்டோ ஸ்விட்ச் (Nintendo Switch), வீடியோ கேம் பிரியர்களுக்கு மட்டுமல்ல‌ உங்களுக்கும் ஆர்வத்தை தூண்டும். புதுவித‌ மற்றும் முன்போல் இல்லாது வித்தியாசமான‌ வீடியோ கேம் க‌ன்சோலை (video game console) நிண்டெண்டோ வடிவமைத்து வருகின்றது.

நிண்டெண்டோ 3DS (Nintendo 3DS) Games மற்றும் நிண்டெண்டோ Wii U (Nintendo Wii U) கேம் கண்சோல்களுக்கு (game console) உலகளவில் பெயர்பெற்ற‌ நிண்டெண்டோ, 2010 முதல் ஸ்மார்ட் கைபேசி பயன்பாடு மற்றும் புதுப்புது மொபைல் வீ டியோ (mobile phone launch and mobile video apps)) ஆப்களின் அறிமுகத்தினால் (video spps releases) சிறுகச்சிறுக‌ சரிவினைக்கண்டு வருகின்றது. இதனை ஈடுகட்ட‌ வழியினைத் தேடிக்கொண்ட‌ நிண்டெண்டோவின் புது தயாரிப்பு தான் நிண்டெண்டோ ஸ்விட்ச். இதுபற்றிய‌ வீடியோவைப் பாருங்கள்.

நிண்டெண்டோ ஸ்விட்ச் இல் என்ன‌ வித்தியாசம் ?

நிண்டெண்டோ கன்சோலின் (Nintendo console) மிக முக்கியமான அம்சம் என்னவென்றால்- நீங்கள் வெவ்வேறு வழிகளில் அதிகமான‌ கேம்களை (play lot of games) விளையாட முடியும். நீங்கள் பஸ் (பேருந்தில்), கார், பிளேனில் பயணிக்கிறீர்கள் அல்லது வீட்டில் இருக்கிறீர்கள் என்றாலும் உங்கள் கேமை எங்கு வேண்டுமானாலும் ஆடிக்கொள்ளலாம் (take with you and play game everywhere), எடுத்தும் செல்லலாம். மல்டிபிளேயர் பயன்முறைக்கும் உபயோகிக்கலாம் - நீங்கள் எங்கு வேண்டுமானாலும் உங்கள் திரையினை (screen and console) வைத்துக்கொண்டு இணைக்கப்பட்ட கண்ட்ரோலர்களை (Nintendo connected controllers) மற்ற‌ நண்பருக்கும் கொடுத்து, சேர்ந்து விளையாடலாம்.

2017 ல் ஸ்விட்ச் விலை மற்றும் அமைப்பு குறிப்புகளை அறிவிக்க உள்ளது. 2017 மார்ச் மாதம் வெளியிடப்பட‌ இருக்கும் நிண்டெண்டோ ஸ்விட்ச் பற்றிய‌ விலை ம‌ற்றும் அமைப்பு குறிப்புகளை அடுத்த ஆண்டு நிண்டெண்டோ அறிவிக்கும் என‌ இணையதள அறிக்கைகள் கூறுகின்றன‌..