வெளியிட்ட தேதி : 05.11.2016

Facebook Introduces The Gameroom. A gaming platform for windows 7 and above PC users.

தொடர்ச்சியாக‌ ஃபேஸ்புக் (Facebook) தனது சேவையினை விரிவுபடுத்தி வருகின்றது. இப்போது பலரையும் ஈர்க்கும் வண்ணம் ஆன்லைன் கேம்களையும் (Online Games) அதை டவுண்லோடு செய்து விளையாடுவதற்கான‌ கேம்ரூம் (download and play facebook gameroom) எனும் புதிய பீஸி அப்ளிகேஷனையும் (PC application) உருவாக்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக்கின் புதிய டெஸ்க்டாப் கேம் பயன்பாடான‌ கேம்ரூம் முதலில் ஃபேஸ்புக் கேம் ஆர்கேட் (Facebook Games Arcade) என்று பெயரிடப்பட்டது. ஃபேஸ்புக் பின்னர் கேம்ரூம் என‌ பெயர்மாற்றம் செய்து யுனிற்றி கேம் டெவலப்மென்ட் மாநாட்டில் (Unity's game development platform conference) வெளியிட்டது.

கேம் பிரியர்களுக்கு இனிமையான‌ செய்தியாக‌ விளங்கும் விஷயமான‌ கேம்ரூம் (Gameroom) கேமிங் பிளாட்போர்மினை (Gaming Platform) டெக்ஸ்டாப் மற்றும் லேப்டொப் கணினிகளில் மட்டுமே (Desktop and Laptop) இன்ஸ்டால் செய்து செயல்படுத்த் முடியும்.

விண்டோஸ் 7 மற்றும் அதற்கு மேலான‌ வெர்ஷ‌னக்ளில் (Windows 7 and upwards) கேம்ரூமை இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். டெவலப்பர்கள் மற்றும் பயனர்களும் இந்த‌ பீட்டா வெர்ஷனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.