நீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்

Chess Board- artificial intelligence from Square Off.
Gears

Play against this automated chess board with its built-in artificial intelligence.

ஹாரி பாட்டர் திரைப்படங்களில் காண்பதைப்போல் மந்திரவாதமான‌, தானாகவே காய்களை நகர்த்துகின்ற‌ அற்புதமான செஸ் போர்டு - நினைவிருக்கிறதா?. இறுதியாக அதுபோன்ற‌ செஸ் போர்டு நிஜமாகவே உருவாக்கப்பட்டு உள்ளது.

ஸ்குயர் ஆஃப் (Square Off) எதிர்முனையில் முற்றிலும் கைகள் இல்லாமல் காய்களை நகர்த்தி தானாகவே விளையாடும் ஒரு தானியங்கி ஸ்மார்ட் செஸ் போர்டாகும் ( is an automated smart chessboard) - நம்ப‌ முடிகிறதா உங்களால். என்ன‌... அற்புதமான ... விஷயம். இதைப்பற்றி அறிய‌ வீடியோவைப் பாருங்கள்.

ஸ்குயர் ஆஃப் சதுரங்க‌ பலகை (Square Off Chess Board) ?

இந்த‌ ஸ்குயர் ஆஃப் (Square Off) சதுரங்க‌ பலகை உண்மையான நேரத்தில் உலகம் முழுவதும் இருக்கும் செஸ் விளையாட்டு ஆட்டக்காரர்களுடன் விளையாட‌ அனுமதிக்கும் ஒரு மொபைல் பயன்பாட்டுடன் (மொபைல் ஆப்) வருகிறது. பலகை உங்களை ஆன்லைனில் எதிர்ப்பவர்களின் ( online opponents) ஒவ்வொரு நடவடிக்கையினையும் பிரதிபலிக்கும் வகையில், காயினை சொந்தமாகவே நகர்த்திக் கொள்ளும் (the chess board automattically moves the coins). எதிரில் ஆன்லைனில் விளையாடுபவர் ஒரு காயினை நகர்த்தினால் ஸ்குயர் ஆஃப் செஸ் போர்டு (Square Off Chess Board) அந்த‌ காயினை அவர் சார்பாக‌ உங்கள் பலகையில் நகர்த்திக் கொள்ளும். ஆகா !!!. என்ன‌ பூச்சாண்டியான‌ செயல் ????

சுவராஸ்யம் என்னவெனில் விளையாட யாருமே இல்லையென‌ நினைக்க‌ வேண்டாம். யாருமே ஆன்லைனில் இல்லையென்றால், நீங்கள் ஸ்குயர் ஆஃப் செஸ் போர்டு (Square Off Chess Board) இன் செயற்கை நுண்ணறிவுக்கு எதிராக விளையாட முடியும். அப்படி விளையாட‌ ஸ்குயர் ஆஃப் செஸ் போர்டு (Square Off Chess Board) ஆப் / பயன்பாட்டில் 'பயிற்சி முறையை (training mode)' பயன்படுத்த வேண்டும். இன்னும் குளிர்ச்சிதரும் விஷ்யம் : நீங்கள் உங்கள் திறமை பொருந்தும் வகையில் : ஆரம்ப நிலை, நடு நிலை, நிபிணர் என‌ தேர்வு செஉது விளையாட‌ முடியும்.

ஸ்குயர் ஆஃப் (Square Off mode), டிரெயினிங் (Training mode), லைவ் ஸ்டீரிம் (Live streaming mode) என‌ மூன்று வகையாக‌ உங்களை விளையாட‌ வைக்கிறது ஸ்குயர் ஆஃப் ஆட்டோமெட்டிக் சதுரங்க‌ பலகை (Square Off automatic Chess Board) .

நாள் : 24.10.2016 திருத்தம் : 01.11.2016