Xiaomi-Mi-Band-2-fitness-tracker
Gadgets

Xiaomi, Mi Band 2 fitness tracker launched In India. Price Rs.1,999.

சீனாவை சேர்ந்த‌ உபகரணம் மற்றும் கருவிகள் (gadget and appliance maker) தயாரிக்கும் சயோமி (Xiaomi), இந்தியாவில் அதன் மி பேண்ட் 2 (Mi Band 2) அணியக் உடற்பயிற்சி கண்காணிப்பு கருவியை (wearable fitness tracker) அறிமுகப்படுத்தியுள்ளது. ஜூன் மாதத்தில், மி பேண்ட் 2 (Mi Band 2) கருவியை சீனாவில் முன்னதாகவே சயோமி (Xiaomi) அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த‌ கருவி முதல் பதிப்பில் இருந்து சில‌ புதிய‌, குறிப்பிடத்தக்க மேம்பாடுகளைக் கொண்டுள்ளது. நேரத்தினைக் காண்பிக்கும் ஓல்இடி டிஸ்பிளே (OLED display), உங்கள் வழிமுறைகள் (steps) மற்றும் இதய துடிப்பபினைக் (heart-beat) காட்டும். இதன் பேட்டரி சார்ஜ், ஒருமுறை சார்ஜ் செய்தால் 20 நாட்கள் வரை வரும்.

உங்கள் கைபேசியில் உள்ள‌ மி ஃபிட் பயன்பாட்டுடன் (Mi Fit app), மி பேண்ட் 2 இணைந்து செயல்பட்டு, நீங்கள் ஓடும் தூரம் (தொலைவு / measure your running) மற்றும் எரிக்கப்பட்ட‌ கலோரிகளை (calorie burn) அளவிட்டு காண்பிக்கும்.

மேலும் இக்கருவி வாரியடிக்கும் நீரினை உட்புகாமல் எதிர்கொள்ளும் வண்ணம் வடிவமைக்கப்பட்டது. மற்றும் உங்கள் இதய துடிப்பை கண்காணிப்பதன் மூலம் உங்கள் தூக்கத்தை கண்காணித்து அளவிடுகிறது (track your sleep). மேலும் முந்தைய மாதிரி போலவே, இந்த‌ மி பேண்ட் 2 அணியும் க‌ருவியால் கைபேசியினை தொலைவிலிருந்து அன்லாக் செய்து திறக்க முடியும்.

இம்மாத‌ இறுதியில் விற்பனைக்கு வரும் இந்த‌ கருவியின் விலை . 1,999.

மி பேண்ட் 2 (Mi Band 2), ஃபிளாஷ் விற்பனை மூலம் வாங்க‌ கிடைக்கும். செப்டம்பர் 30 அன்று இரவு12 மணிக்கு அமேசான் (Amazon) தளத்திலும்; செப்டம்பர் 27, பகல் 12 மணிக்கு Xiaomi தளத்திலும் விற்பனையாக‌ உள்ளது. பிடித்ததை பெற‌ காத்திருந்து இந்த‌ இணையதளங்களில் இருந்து வாங்கி பயனடையுங்கள்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.