வெளியிட்ட தேதி : 27.10.2017
WhatsApp's delete for everyone
Gadgets

WhatsApp's new update will give the option to “delete for everyone” now lets you recall messages you’ve sent by mistake

'வாட்ஸ் அப்பில் தவறான நபர் அல்லது குழுவிற்கு ஒரு செய்தியை அனுப்பி மாட்டிக்கொண்டவர்கள் உண்டு. இப்போது இந்தப் பிரச்சினை இல்லை. இதற்கென‌ மெசேஜை (WhatsApp message) திரும்பப் பெறும் வகையில் 'Recall' என்னும் சிறப்பம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்பில் இதுவரையிலும் தவறான அல்லது பிழையான மேசேஜ்களை நாம் அனுப்பிவிட்டால் அதனை அழித்தாலும் அத்தகவலானது பெறுபவருக்கு சென்று விடும். இதற்கான‌ தீர்வாக‌ புதிதாய் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள “delete for everyone” எனும் தேர்ந்தெடுப்பின் (OPtion) மூலமாக அனுப்பிய தகவலினை ஏழு நிமிடங்களுக்குள் திரும்பப் பெறலாம் அல்லது அழிக்கவும் (டெலீட்) செய்யலாம்.

புது அம்சத்தினை பயன்படுத்தும் பட்சத்தில் பெறுநருக்கு அனுப்பப்பட்ட‌ மேசேஜில் நகல் போன்ற போலியான தகவல் மட்டுமே செல்லும். அவரின் chat history-யிலும் அது சேமிக்கப்படாது மற்றும் புது மெசேஜ் வந்ததற்க்கான எந்தவொரு அறிவிப்பையும் தெரிவிக்காது.

இந்த புதிய புதுப்பிப்பு "delete for everyone" என்ற விருப்பத் தேர்வின் வழியாக‌ குழு அரட்டையிலிருக்கும் மெசேஜ்களையும் நீக்குகின்றது. அழிக்கப்பட்டல் மெசேஜிற்குப் பதிலாக, செய்தி அகற்றப்பட்டதை அறிவிக்கும் அறிவிப்பைப் பார்ப்போம்.

இந்த வசதி விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. வாட்ஸ் அப் “delete for everyone” அம்சம் மெதுவாக அப்டேட் செய்யப்படுகின்றது. நீங்கள் எந்த நேரத்திலும் இவ்வசதியினை செயல்படுத்தும்
அறிவிப்பு செய்தியை உங்கள் வாட்ஸ் அப் ஆப்பில் ( WhatsApp's app) பெறுவீர்கள். ஆகையினால் நீங்கள் அன் இன்ஸ்டால் / ரீ இன்ஸ்டால் (uninstall and reinstall) செய்ய‌ வேண்டியதில்லை. நீங்கள் வாட்ஸ் அப் இன் ‍‍‍-----> WhatsApp's Setting> Chats>Backup சென்று இந்த‌ வசதியினை பெற்றுக்கொள்ளலாம்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.