வியப்பூட்டும் விர்ச்சுவல் ரியாலிட்டி கீபோர்ட் உருவாக்கப்பட்டது

Awesome Virtual Reality Keyboard Created by Jonathan Ravasz

விர்ச்சுவல் ரியாலிட்டியைத் தழுவி பல்வேறு பயன்பாடுகள் பலவகைப்பட்ட‌ துறைகளிலும் புகுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்ற காலம் இது. அதிகமாக‌ வீடியோ கேம்களுக்கென‌ பயன்படுத்தப்பட்டு வரும் விர்ச்சுவல் ரியாலிட்டி (Virtual Reality Technology) தொழில்நுட்பத்திலான‌ விசைப்பலகை தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.

வி.ஆர் டெவலப்பர் ஆன‌ ஜொனாதன் ரவஸ் ( Jonathan Ravasz ) இதனைக் உருவாக்கியுள்ளார். இந்த‌ கீபோர்ட் பயன்படுத்தி, அக்குலஸ் ரிஃப்ட், ஹெச்டிசி வைவ் (HTC Vive), வருங்காலத்தில் பிளே ஸ்டேசன் விஆர் (PlayStation VR) ஆகியவற்றில் கன்ட்ரோலர்களினால் தட்டச்சு செய்ய முடியும் (Oculus Rift, HTC Vive and maybe in the future the PlayStation VR).

இந்த‌ விசைப்பலகை பற்றி மேலும் அறியவும் செயல்படும் விதம் பற்றி அறியவும் கீழே உள்ள‌ வீடியோவைப் பாருங்கள். உங்கள் சொந்த வி.ஆர் கருவியில் பயன்படுத்திப்பார்க்க‌ விரும்பினால் கிட்ஹப் (GitHub website) வலைத்தளத்திற்குச் சென்று ஃபைல்களை (கோப்புக்களை/ ) நேரடியாக பதிவிறக்கம் செய்யலாம்.

நாள் : 27.02.2017 திருத்தம் : 27.02.2017

புதியவை / Recent Articles