ட்விட்டர் தொழில் நிறுவனங்களுக்கான‌ சாட்பாட்ஸ்களை அறிமுகப்படுத்துகிறது

Twitter+chatbots+for+businesses
Gadgets

Twitter introduces chatbots for businesses with features like direct messages, quick replies and more

முன்னணி சமூக ஊடக வலையமைப்புகளில் ஒன்றான‌ ட்விட்டர் (Twitter), வாடிக்கையாளர் சேவைகளை உதவுவதுதன் (aids customer service) நோக்கோடு வணிகம்/தொழில் நிறுவனங்களுக்கு நேரடி செய்திகளை அனுப்பவும் (direct messages), விரைவான பதில்கள் (Quick replies) மற்றும் வரவேற்பு செய்திகளை (welcome messages) அனுப்பும் chatbot அம்சங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

ட்விட்டர் தனது நிலையை மேலும் வலுப்படுத்தும் முயற்சியில் வாடிக்கையாளர் சேவை எனும் வசதியை வழங்கி சமூக‌ ஊடகவலைகளின் (Social Networking platforms) மத்தியில் தனது நிலையை தக்கவைக்க‌ முன்னெடுத்துள்ளது.

ட்விட்டர் தனது வலைப்பதிவு இடுகையில் (blog post), Welcome Messages எனும் வரவேற்பு செய்திகள் உரையாடல்களை துவங்கவும் (initiate conversations ), Quick Replies அம்சம் தேர்வு விருப்பங்களை பயனர்களிடம் கேட்டு விருப்பத் தேர்வுகளைத் தேர்ந்தெடுக்கும் ஒரு அம்சமாக‌ பயன்படுத்த முடியும் என்று கூறியுள்ளது. பீட்ஸா ஹட் (Pizza Hut), Evernote, Spotify, Norton மற்றும் AirBnB நிறுவனங்கள் இந்த‌ சேவையை முதன்முதலாகப் பயன்படுத்தி கொள்ளும்.

ட்விட்டரின் இந்த‌ சாட்பாட் வசதி பேஸ்புக் மெசஞ்சருக்கு நிகராக‌ போட்டியாக‌ விளங்கும்.

ஃபேஸ்புக்கின் மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg), மெசஞ்சரில் 33,000 chatbots உள்ளன‌ என்றும் இது மேலும் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார். செப்டம்பர் முதல் chatbots பயன்படுத்தும் வணிக‌ நிறுவனங்கள் (Chatbots for businessess) பயனர்களை வெளிப்புற இணையதளத்துக்கு (external websites) அனுப்பாமல் கொடுப்பனவுகளை (accept payments) செய்ய‌ முடியும்.

நாள் : 06.11.2016 திருத்தம் : 09.12.2016