சோனி உங்களிடம் நிறுத்த நினைப்பது : தொட்டு தொட்டு பேசும் செயல்தானா?

Sony’s depth-tracking sensor translates specific movements as gesture-based controls.

கடந்த ஆண்டு சோனியால் வாங்கப்பட்ட‌ ஒரு பெல்ஜிய நிறுவனம் சாஃப்ட்கைனெட்டிக் (SoftKinetic), த‌ற்போதைய பி.எம்.டபிள்யூ 5 மற்றும் 7 தொடர் கார் மாடல்க‌ளில் ஈர்க்கக்கூடிய சென்சார் தொழில்நுட்பம் ஒன்றினை புதிதாய் புகுத்தியுள்ளது.

என்ன‌ அந்த‌ புது தொழில்நுட்பம் ?

சோனி நிறுவனத்தின் கூர் கண்காணிப்பு சென்சார் ஆனது முற்றிலும் உங்களது உள்ளுணர்வு வழியில் உங்களது காரினை தொடர்பு கொள்ள அனுமதிக்கும். தற்போதைய‌ குரல் கட்டளைகள், டேஷ் போர்ட் தொடுதல் என‌ எதுவும் தேவையில்லாமலேயே இயங்கச் செய்ய‌ முடியும் (கண்கட்டு வித்தை போன்று இருக்கும் : வீடியோ பாருங்கள். புரியும் உங்களுக்கு).

சாஃப்ட்கைனெட்டிக் (SoftKinetic) சோனியால் கையகப்படுத்தப் பட்டாலும், சாஃப்ட்கைனெட்டிக்கால் உருவாக்கப்பட்ட‌ ஒரு அற்புதமான சென்சார் ஆனது உங்களது சைகையினை வைத்தே பயணத்தின் போது பாதைகளை கண்டறியவும், திசைகளில் பார்க்கவும் மற்றும் டேஷ்போர்டில் காலநிலை, பொழுதுபோக்கு விருப்பங்களைத் தேர்வு செய்யவும் அனுமதிக்கும்.

தற்போதைய விலையுயர்ந்த மற்றும் செயலிழப்பு வாய்ப்பு அதிகரிக்க நேரிடும் சென்சார்களை நம்பியிருப்பதை விட, அவைகளின் தேவைதனை குறைக்க சோனி முடிவு செய்துள்ளது. புது நுட்பமானது உங்களது கைகளின் குறிப்பிட்ட இயக்கங்களை சைகை சார்ந்த கட்டுப்பாடுகளுக்கு மொழிபெயர்க்கும். இவை அனைத்தும் உங்களது தலைக்கு மேலிருக்கும் லைற்றின் அருகே பொருத்தப்பட்ட‌ சென்சார் மூலம் நிகழும்.

உதாரணங்கள் : ஆட்டோ பைலட் பயன்முறையின் போது காரினை வேகப்படுத்த வேண்டுமா? முன்பக்கமாக‌ விரலினைச் சுட்டுங்கள் . மெதுவாக காரினை செலுத்த் வேண்டுமா? ஒரு விரைவான பின்பக்க‌ வாட்டில் உங்களது கை இயக்கம். இவைதான் தந்திரங்கள். ரேடியோ சீர்செய்யவும் ஒரு தென்படாத‌ சுழற்சியின் மூலம் திருப்பி கேட்கவும் இயலும். அனைத்தும் உங்களின் விரல் சைகையில் எளிதாய் கூடும்.

நாள் : 06.01.2017 திருத்தம் : 06.01.2017

புதியவை / Recent Articles