Skype Share Screen feature for Smartphones
Gadgets

Skype testing new feature which enable users to share their smartphone screens during video calls

ஸ்கைப் (Skype) ஒரு புதிய அம்சத்தை பரிசோதித்துப் வருகிறது. இந்த வசதியானது பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போன் திரைகளை வீடியோ அழைப்பின் போது பகிர்ந்து கொள்ள உதவும்.

இலவசமாக வீடியோ அழைப்பு, குரல்வழி (வாய்ஸ் கால் / Voice Calling) அழைப்பு மற்றும் கோப்பு பரிமாற்றம் (file transfer) ஆகிய சேவையை வழங்கி வரும் ஸ்கைப் பின் சில வசதிகள் டெக்ஸ்டாப் கணினிகள், மடிக்கணினிகள் ஆகியவற்றில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிலை.

ஸ்கிரீன் சேரிங் (Share Screen) எப்படி செய்வது

பயனர்கள் அழைப்பில் ( during Call) இருக்கும்போது கைபேசி திரைக்கு மேல் வலது மூலையில் உள்ள பொத்தானைக் கிளிக் செய்த பின் திரையின் கீழே காணப்படும் 'Share Screen' பட்டனை கிளிக் செய்வதன் மூலம் ஸ்கிரீன் சேரிங் (Share Screen) அம்சத்தை முயற்சிக்க முடியும்.

இதுவரையிலும் இச் செயலியில் தரப்பட்டுள்ள ஸ்கிரீன் சேரிங் (Share Screen) வசதியானது டெக்ஸ்டாப் மற்றும் மடிக்கணினிகள் ஆகியவற்றிற்கு மாத்திரமே இதுவரை தரப்பட்டிருந்தது. தற்போது முதன் முறையாக அன்ரோயிட், iOS சாதனங்களுக்காக இவ் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

குழு வீடியோ அழைப்பினை ( Group Video Chat) ஏற்படுத்தும்போதும் இவ் வசதியை பயன்படுத்த முடியும்.

முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குழு வீடியோ அழைப்பில் 50 பேர்வரை பங்குகேற்கக்கூடிய வசதியையும் மைக்ரோசாஃப்ட் ஸ்கைப்பில் அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.