மீன்பிடிக்க‌ உதவும் பவர்விஷனின் புதிய‌ ரோபோ

Powervision's PowerRay
Technology

Powervison's PowerRay Fishfinder : a standalone device connected with mobile app helps fishing.

ட்ரோன்கள் தயாரிப்பில் பெயர்பெற்ற‌ பவர்விஷன் நிறுவனம், புதிதாய் பவர்ரே (PowerRay ) எனும் நீர்மூழ்கி ரோபோவினை அறிமுகப்படுத்தியுள்ளது. பொழுதுபோக்கிற்கென‌ மீன்பிடிப்பவர்களிடயே இந்த‌ புதிய‌ உபகரணம் (கேட்ஜெட்) ஒரு தனியிடம் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.

பவர்ரே / PowerRay என்ன‌ செய்யும்

நீர்மூழ்கி ரோபோவான‌ (Submergible roobot) பவர்ரே நீருக்கடியில் 30 மீட்டர்வரை (98அடி) டைவிங் (diving) செய்யக்கூடியதும், நான்கு மணி நேரம் வரையிலும் நீருக்கடியில் தாக்குபிடிக்கும் திறன் கொண்டது. நீருக்கடியில் இருக்கும்போது அடிப்பரப்பினில் உள்ளவற்றை அதனுள்ளமைக்கப்பட்ட‌ 4k UHD கேமரா மூலம் வீடியோ காட்சிகளாய் படம்பிடித்து உங்களது ஐஓஸ் மற்றும் அண்ட்ராய்ட் கருவிகளுக்கு வைஃபை மூலம் அனுப்பும்.

மோபைல் ஆப்பில் நீங்கள் மீன்கள் பரவியுள்ள‌ இடம், தண்ணிரின் வெப்ப‌ நிலை, ஆழம், நீருக்கடியில் உள்ள‌ அமைப்பு, ஆகியவற்றினை குறித்த‌ விரிவான‌ தகவல்களைப் பெற‌ முடியும். பொழுதுப்போக்கு மீன்பிடித்தல் துறையினை தொழில் நுட்பமானது பெரிதும் அண்டவில்லை எனபதை தவிர்த்து, முன்போன்றல்லாமல் நுகர்வு‍தயார் தொழில்நுட்பத்துடன் பொழுதுபோக்காளர்களின் இன்பத்தினை மிகவும் சிறப்பானதாய்ச் செய்ய‌ இவ்வகை உபகரணங்கள் உதரணமானவை.

பவர்ரேயின் விலை சுமார் $3000 இருக்கக்கூடும்.

நாள் : 09.01.2017 திருத்தம் : 09.01.2017