Gadgets

Nifty MiniDrive easily add up to 200GB to your Macbook

நிப்டி மினிடிரைவ் (Nifty MiniDrive) உங்கள் மேக்புக்கின் (Apple MacBook) சேமிப்பு திறனை 200GB வரை அதிகரிக்கும். இது எக்ஸ்டேர்னல் டிரைவ்கள் (External Drives) போல‌ பருமனான இணைப்பாக‌ இல்லாமல் உங்கள் மேக்புக் (Macbooks) 200GB வரை சேர்க்கும் வசதியை நிஃப்டி மினிடிரைவ் (Nifty MiniDrive) கொண்டு வந்துவிட்டது.

உங்களின் மேக்புக்கில் செமிக்கும் இடம் இல்லாமல் அவதிப்படுகிறீர்களா? ஆம். நாம் அனைவரும் எதிர்கொள்ளுமொரு விஷயமாகும். என்னதான் எக்ஸ்டேர்னல் டிரைவ்கள் பயன்படுத்தி தீர்வு காண‌ முடிந்தாலும் இவ்விஷயம் அனைவருக்கும் பிடிப்பதில்லை. இதற்கான‌ ஒரு சிறந்த மாற்றீடாக மேக் புக்குகளுக்கென‌ மெலிதான‌ வடிவுடன் 200GB வரை சேமிக்கும் வசதியினை சேர்க்க நிப்டி மினிடிரைவ் (Nifty MiniDrive) அனுமதிக்கும்.

எளிமையாக, ஒரு எஸ்டி கார்டினை நிப்டி மினிடிரைவ் (MiniDrive) ல் சொருகிய‌ பின்னர் உங்கள் மேக்புக் புரோ அல்லது ஏர் (MacBook Pro or Air) கருவிகளின் பக்கவாட்டிலுள்ள‌ ஸ்லாட்டில் செலுத்துங்கள் . இது கூடுதல் சேமிப்பு இடம் (Additional Storage) மற்றும் தினசரி பேக் அப்பிற்கு (Daily Backup) தீர்வு வழங்கும்.

அதுமட்டுமல்ல‌, நிப்டி மினிடிரைவ் (Nifty MiniDrive) பயன்படுத்துவதனால், “low disk storage” எச்சரிக்கைகளை, தகவல் இழப்பு (data loss) ஏற்படுதல், தற்செயலான அல்லது துரதிருஷ்டவசமான நிகழ்வு (accidental deletion) ஏற்படாமல் பாதுகாத்து கொள்ள முடியும்.