Ipad Mini 5
Gadgets

iPad mini 5: Coming In March 2019

ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டின் நடுவில் அதன் 10' இன்ச் ஐபாட் மினி 5 மற்றும் குறைந்த விலை ஐபாட் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளதாக‌ பல‌ இணைய‌தளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன‌. 2015 ஆம் ஆண்டில் அறிமுகமாகி வரவேற்பினை பெற்ற‌ ஆப்பிள் ஐபாட்4 மாடலினைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் அதன் ஐந்தாவது ஜெனெரேஷன் ஐபாட்மினி மற்றும் குறைந்த விலையில் ஐபாட் மாடல்களை உருவாக்க உள்ளது.

புதிய ஆப்பிள் ஐபாட் மினி, 10' இன்ச் டிஸ்பிளே, கேமரா , டச் ஐடி மற்றும் மெலிந்த அலுமினியம் ஃபெஸ்ஸில்ஸ் (thinner bezels) கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சோனி நிறுவனத்துடன் இணைந்துள்ள ஆப்பிள் நிறுவனம் 3டி கேமராக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அடுத்த தலைமுறை ஐபோன் ப்ரோ (iPhone Pro) மாடலை உருவாக்கி வருகின்றது.

ஐபோன் ப்ரோ போன்கள் 3டி லேசர் சென்சார்களுடன் (3D LASER Sensors) 2020 ஆம் ஆண்டில் விற்பனைக்கென்று அறிமுகம் செய்யப்படலாம் என்று தெரியவந்துள்ளது. ஆப்பிள், அடுத்து அறிமுகம் செய்ய இருக்கும் ஐபோன்களில் iOS 13 இயக்க முறைமையுடன் ( iOS 13 - OS ) வெளியிடுவதற்கென்று அந்நிறுவனம் செயல்முறைகளை நடைமுறைபடுத்தி வருகின்றது.

இந்த நிலையில் iOS 13 இயங்குதளத்துடன் கூடிய ஐபோன்கள் வரும் ஆண்டில் வெளியிடப்படுமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.