வெளியிட்ட தேதி : 17.08.2017

Google Voice Search Now Available in Tamil as well to One Billion People Worldwide

கூஃகிள் நிறுவனம் புதிதாய் கூடுதலாக‌ எட்டு இந்திய மொழிகளில் குரல் தேடலை அறிவித்துள்ளது. தமிழ், இந்தி தவிர, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, தெலுங்கு மற்றும் உருது ஆகிய மொழிகளை கூகிள் வாய்ஸ் செர்ச் ஆதரிக்கும். அண்ட்ராய்டு மற்றும் iOS இல் Google பயன்பாட்டின் தேடல் (Search through the Google app) மூலமாகவும் Android இல் Gboard பயன்படுத்தி தமிழில் தட்டச்சும் செய்ய‌ முடியும்.

விரல்களால் டைப் செய்வதைவிட‌ குரலினை வெளியிட்டு, கட்டளையிடுவதனால் எழுத்துக்களை தானியக்கம் செய்து 3 மடங்கு வேகமாக தேடல் செய்ய‌ முடியும். இதனை கருத்தில் கொண்டு சில வருடங்களுக்கு முன்னதாக‌ கூகிள் குரல் தேடலினை (Google Voice Search) அறிமுகம் செய்தது.

தற்போது 30 க்கும் மேற்பட்ட மொழிகளில், பல‌ பில்லியனுக்கும் அதிகமான‌ மக்கள் அவர்களின் தாய் மொழியில் தேடல் செய்ய‌ பயன்படும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது..

மொத்தத்தில், Google இன் பேச்சு அறிதல் (Google’s speech recognition) இப்போது 119 மொழிகளை ஆதரிக்கிறது. கூடுதலாக, எமோஜி மொழியையும் ஆதரிக்கிறது.
இதன் அர்த்தம் என்னவென்றால் நீங்கள் அமெரிக்க மொழியில் "winky face emoji", "smiley face emoji", "tongue out emoji", போன்ற வார்த்தைகளை கொண்டு எமோஜியுடன் சேர்த்து ஆணையிட முடியும் (அ) அமெரிக்க ஆங்கிலத்தில் எமோஜியுடன் குரல்களை வெளிப்படுத்த முடியும் என்று கூகிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

புதிதாக ஆதரிக்கப்படும் மொழிகளின் முழு பட்டியல் பின்வருமாறு:

அம்ஹாரிக் (எத்தியோப்பியா)
ஆர்மீனியன் (ஆர்மீனியா)
அசர்பைஜானி
வங்காளம் (பங்களாதேஷ், இந்தியா)
ஆங்கிலம் (கானா, கென்யா, நைஜீரியா, தான்சானியா)
ஜியோர்ஜியன் (ஜோர்ஜியா)
குஜராத்தி (இந்தியா)
ஜாவானீஸ் (இந்தோனேசியா)
கன்னடம் (இந்தியா)
கெமர் (கம்போடியன்)
லாவோ (லாவோஸ்)
லேட்வியன் (லாட்வியா)
மலையாளம் (இந்தியா)
மராத்தி (இந்தியா)
நேபாளம் (நேபாளம்)
சிங்களம் (இலங்கை)
சுடனீஸ் (இந்தோனேசியா)
சுவாஹிலி (தான்சானியா, கென்யா)
தமிழ் (இந்தியா, சிங்கப்பூர், இலங்கை, மலேசியா)
தெலுங்கு (இந்தியா)
உருது (பாகிஸ்தான், இந்தியா)


(ஆங்கிலத்தில்)

Amharic (Ethiopia)
Armenian (Armenia)
Azerbaijani (Azerbaijani)
Bengali (Bangladesh, India)
English (Ghana, Kenya, Nigeria, Tanzania)
Georgian (Georgia)
Gujarati (India)
Javanese (Indonesia)
Kannada (India)
Khmer (Cambodian)
Lao (Laos)
Latvian (Latvia)
Malayalam (India)
Marathi (India)
Nepali (Nepal)
Sinhala (Sri Lanka)
Sundanese (Indonesia)
Swahili (Tanzania, Kenya)
Tamil (India, Singapore, Sri Lanka, Malaysia)
Telugu (India)
Urdu (Pakistan, India)

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.