Google Maps new feature can now guide you to drug disposal locations
Gadgets

Google Maps new feature can now guide you to drug disposal locations

பொதுவாக இடங்கள் மற்றும் பயணிக்கும் பாதைகளை காண்பித்து வழிகாட்டியாகவும், இட அமைவினை அறிந்துகொள்வதற்கும் கூகுள் மேப் பெரிதும் உதவியாக இருக்கின்றது. இப்போது கூஃகிள் மேப்பில் மற்றுமொரு புதிய வசதியினை உள்ளடக்கம் செய்ய கூகுள் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இந்த புது வசதியின்படி பயன்படுத்தப்படாத நிலையில் காணப்படும் பெருமளவான மாத்திரைகளை அழிப்பதற்காக அதற்கான சென்டர்கள் இருக்கும் இடத்தினை பயனர்களுக்கு காண்பிக்கும்.

கூஃகுள் அமெரிக்காவில் வளர்ந்து வரும் ஓபியோட் நோய்த்தொற்றுக்கு (opioid epidemic) பதிலளிக்கும் வகையில், மக்களின் மருந்து பெட்டிகளில் எஞ்சியிருக்கும் மாத்திரைகளை அகற்றுவதற்கான வழியினை தனது கூஃகிள் மேப் ஆப் (செயலி) வசதியுடன் செய்துள்ளது.

Google Map guide you to drug disposal locations Google Maps now features prescription-drug disposal spots. Search terms like “drug drop off near me" will also pinpoint your nearest kiosk.

கூகுள் மேப் செயலியில் (Mobile App) சென்று "drug drop-off near me" அல்லது "medication disposal near me" என டைப் செய்தால் மாத்திரைகளை (மருந்துகளை) அழிக்க உதவக்கூடிய சென்டர்களில் (prescription-drug disposal locations) உங்களுக்கு அண்மையில் இருப்பவற்றினை காண்பிக்கும். மருந்தகங்கள், மருத்துவமனைகள் அல்லது அரசாங்க கட்டிடங்களில் நிரந்தரமாக அகற்றும் இடங்களை "drug drop-off near me" அல்லது "medication disposal near me" போன்ற தேடல் சொற்களை டைப் செய்தால் காண்பிக்கும்.

தற்போது இச் சேவையில் 35,000 சென்டர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அமெரிக்க நாட்டில், முதன் முறையாக Alabama, Arizona, Colorado, Iowa, Massachusetts, Michigan மற்றும் Pennsylvania ஆகிய 7 மாநிலங்களையும் உள்ளடக்கியதாக இச் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.