power-generated-from-human-touch
Gadgets

Flexible device captures energy from human motion

ஹாயாக நடந்து கொண்டே, விரலால் தொட்டு தேய்த்து செல் போன் சார்ஜ்ஜிங், புளூடூத் ஹெட்செட்களை இயக்க செய்யும் நாளினை மிக அருகில் நெருங்கிக் கொண்டிருக்கின்றோம்.

மிச்சிகன் மாநில பல்கலைக்கழக பொறியியல் ஆராய்ச்சியாளர்கள் (Michigan State University engineering researchers ) உண்மையில் ஒரு புதிய வழியில் மின்சக்தியினை உருவாக்கும் முறையைக் கண்டுபிடித்துள்ளனர். ஒரு ஃபிலிம் போன்ற கருவியை பயன்படுத்தி, தொடுகை முறை மூலம், மனித அசைவில் இருந்து ஆற்றலை அறுவடை செய்து மின்சக்தியினை உருவாக்கியுள்ளனர், மற்றும் அதிக சக்தியினை இந்த பிலிம் போன்ற கருவியை மடித்துக்கொள்வதனால் (அசைப்பதனால்) உருவாக்க முடியும்.

மின்சக்தியினை உருவாக்கம் செய்ய பல்வேறு வழிமுறைகள் இருந்தாலும் இந்த இலகுவான முறையில் மின்சக்தியை பிறப்பிக்கும் வழிமுறைக்காக பல அடுக்குகளைக் கொண்ட புதுவிதமான கட்டுபொருளால் தயார்செய்யப்பட்ட கருவி ஒன்றும் உருவாக்கப்பட்டது.

இந்த புதுமையான பொருளானது, சிலிக்கான் செதில்களுடன், வெள்ளி, பாலிமைட், பாலிப்ரொப்பிலீன் ஃபெரோ எலக்ட்ரெட் (silver, polyimide and polypropylene ferroelectret) போன்ற சூழல் நட்பு பொருட்களினைக் கொண்டு ஜோடிக்கப்பட்ட பல்வேறு அடுக்குகள் அல்லது மெல்லிய தாள் போன்ற‌ அமைப்பினைக் கொண்டது. மீள்தன்மை (நெகிழும்) கொண்டதாகவும், பிலிம் ரோல் போன்ற அமைப்பினை உடையதாகவும் காணப்படுகின்றது.

அயனிகள் (Ions) சேர்க்கப்படுவதால் கருவியின் ஒவ்வொரு அடுக்கும் மின்னூட்டத் துகள்களைக் (Charged particles) கொண்டுள்ளது .மனித தொடுகை (human motion) அல்லது அசைத்து இயக்குவதனால் உண்டாகும் இயந்திர ஆற்றல் (Mechanical Energy) மூலம், கருவியானது அழுத்தப்படும் போது மின் ஆற்றல் உருவாக்கப்படுகின்றது.

பூர்த்திசெய்யப்பட்ட கருவியானது, பயோ கம்பாற்றிபிள் ஃபெரோ எலக்ட்ரெட் நானோ ஜெனெரேட்டர் (biocompatible ferroelectret nanogenerator), அல்லது FENG என்று அழைக்கப்படுகிறது.

இந்த தொழில்நுட்பமானது ஸ்மார்ட் ஃபோன்கள் (smart phones) மற்றும் டேப்லட் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தொடுகை முறை மூலமே (தொட்டு, தேய்த்து இயக்குவதால்) செயற்படுத்தப்படுகின்றன. எனவே மொபைல் கருவிகளில் இந்த தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி ஒவ்வொரு முறை தொடும்போதும் பேட்டரியை (மின்கலம்) சார்ஜ் செய்யலாம்.

இது தவிர உடைகள், காலணிகளிலும் இத் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி மின்சக்தியைப் உருவாகும் சாத்தியம் தொடர்பான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.