வெளியிட்ட தேதி : 05.01.2017

The fitness tracker from EyeQue measures your eyesight - worths $30

ஃபிட்னெஸ் டிரேக்கர்கள் பற்றி நாம் அறிந்தவையே. ஆனால் பொதுவாக‌ அவை நமது உடற்பயிற்சி, நடைபயிற்சிதனை, இதய‌ துடிப்பு என‌ அளவிட்டு காண்பிக்கும் (fitness trackers that measures your steps and heart rate). ஆனால் கண்பார்வையினை அளவிட‌ ?? EyeQueவின் (ஐ க்யூ) பர்சனல் விஷன் டிராக்கர் (EyeQue’s Personal Vision Tracker) இதனை செய்துவிடும். $ 30 விலையாகும் இந்த‌ உபகரணம் உங்களது கண்பார்வையினை கைபேசி உதவியுடன் துல்லியமாக‌ அளவிட்டு காண்பித்துவிடும்.

நீங்கள் எண்ணுவதைப் போல‌ இந்த‌ பொறிக்கருவியானது உங்கள் கண்களைச் சுற்றி கட்டிக்கொண்டு அளவிடுவதில்லை. மாறாக EyeQue ஒரு சிறிய உருளை நுண்ணோக்கியாகும் (small cylindrical microscope). இதனை உங்கள் கைபேசியில் வார் போன்று சுற்றிக்கட்டினால் போதும். EyeQue உங்களது மொபைல் ஃபோனின் திரை (mobile phone's display), மற்றும் லென்ஸ்களைப் பயன்படுத்தி உங்கள் கண்களின் கதிர் சிதைவு பிழையை அளவிட்டு, கிட்ட‌ பார்வையும், தூர‌ பார்வை மற்றும் உருப்பிறழ்ச்சியினை கண்டறிந்துவிடும் (measures eye’s refractive error to detect nearsightedness, farsightedness and astigmatism).

நீங்கள் சோதனையினை நான்கு முதல் ஆறு முறை (சுமார் 30 நிமிடங்கள் மொத்தம்) செய்தபிறகு, ஒரு மருத்துவரின் பரிந்துரையினைப் பெற்று மூக்குக்கண்ணாடி வங்குவதைபோல‌, உங்களுக்கான‌ "பார்வைக்கண்ணாடி எண்கள்," என‌ கண்களுக்குப் பொருந்தக்கூடிய‌ கண்ணாடி லென்ஸ் எண்களை EyeQue ஆப்பில் ஒரு கணம் பெறுவீர்கள்.

இக்கருவியானது அண்ட்ராய்டு மற்றும் iOS மொபைல்களில் வேலை செய்யும். அளவீடுகள் துல்லியமாக இருக்க‌ உங்களது கைபேசியின் திரையானது 300 dpiக்கு மேலே இருக்க வேண்டும்.

இந்த‌ EyeQue கருவியானது ஒரு மாத‌த்திற்கு முன்பாகவே கூட்ட‌ நிதி ந‌ல்கைக்காக‌ கிக்ஸ்டார்டர் பக்கத்தில் பிரச்சாரம் ( crowdfunding campaign ) செய்யப்பட்டு வருகின்றது. இதுவரை சுமார் $ 127,000 பெற்று அதன் இலக்கான‌ $ 25,000 ஐ முறியடித்துள்ளது. மேலும் பிப்ரவரி மாதம் முதல் முன்பதிவு செய்தவர்களுக்கு விநியோகம் செய்யவும் உள்ளது. கிக்ஸ்டார்டர் பக்கத்தில் முன்னமே ஆர்டர் செய்வதற்கான‌ (pre-order one now by backing the Kickstarter page) பக்கமும் உள்ளது.

கிக்ஸ்டார்டர் பக்கம்

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.