download macOS ‘High Sierra’
Gadgets

Download mac-OS High Sierra free from Apple’s App Store

ஆப்பிளின் MacOS க்கான‌ புதிய மேம்படுத்தல் (பதிப்பு) macOS ‘High Sierra’ இப்போது இலவசமாக‌ கிடைக்கின்றது. புது பதிப்பில் சொல்லும்படியாக‌ புதிய அம்சங்களிள் இல்லை என்றாலும், சில புதுப்பிப்புகள் குறிப்பிடப்படவேண்டியவை. அதைப்பற்றி பார்ப்போம்.

‘High Sierra’ / ஹய் சியரா அம்சங்கள்.

முதலாவதாக‌ புகைப்படங்கள் ; இது உயரம்சமாகத் தெரிகிறது. ஆப்பிள் ஃபோட்டோ எடிட்டரில் (photo editor) இப்போது அதிகமான கவனத்தை செலுத்துகிறது. ஃபோட்டோவில் எடிட்டிங்கில் : கலர் டிராப்பர் மற்றும் துல்லியமான‌ சீரமைப்புக்கான‌ கர்வ் பேலட் என‌ இரு அம்சங்களைக் கொண்டுள்ளது. மேலும் சிறந்த செயற்கை நுண்ணறிவு (smarter Artificial intelligence) துணையுடன் அசல் மற்றும் யதார்த்தமான ஃபில்டர்களைப் பெற்று புகைபடங்களை சரிபார்க்கும் "ஒப்பீட்டு" அம்சத்தையும் (Compare feature) கொண்டுள்ளது.


தற்போது வெளியான‌ ஆப்பிளின் MacOS பதிப்பிலுள்ள‌ ஃபோட்டோ எடிட்டர் ஆனது ஒரு மாற்றீடு அல்ல,என்றாலும் பழைய‌ எடிட்டரில் கூடுதல் திருத்தங்களைப் பெற்று ஒரு சிறந்த புகைப்பட எடிட்டரைத் தயார் செய்துள்ளது.
.

சஃபாரி பிரௌஸர் (உலாவி)

சஃபாரி உலாவி மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் கூற்றுப்படி, 'ஒரு மேக் சாதனத்தில் சஃபாரி 11 உலாவியானது தற்போது சந்தையில் வலம்வரும் உலாவிகளுள் வேகமாக செயல்படும் உலாவி' என‌ கூறப்படுகின்றது. இது, ஆட்டோமேட்டிக்காகா (தானியங்கி) விளம்பரங்களைத் தடுக்கிறது.

அதுமட்டுமல்ல, நோட்ஸ், ஸ்பாட்லைட் மற்றும் மெயில் இல் உள்ள‌ உள்ளமைக்கப்பட்ட தேடல் வசதி என‌ சில சிறிய புதுப்பிப்புகளையும் நீங்கள் கவனிக்கலாம். துரதிருஷ்டவசமாக, பேசும்படியாக‌ கவர்ச்சிகரமான‌ புதிய அம்சங்கள் ஏதுமில்லை. புது மேக் வெர்ஷனை ஆப் ஸ்டோரில் இலவசமாக டவுண்லோடு செய்து நீங்கள் மேம்படுத்திக் கொள்ளலாம்.