Pepper X THE World's Hottest Pepper.
உணவு

Pepper X dethroned The Carolina Reaper and get crowned as THE World's Hottest Pepper.

பெப்பர் எக்ஸ் (Pepper X) இதற்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக‌ அறிவிக்கப்பட்ட‌ கரோலினா ரீப்பர் (Carolina Reaper ) மிளகினை பின்னுக்கு தள்ளி உலகின் காரமான மிளகாய் எனும் மகுடத்தினை அணிய‌ உள்ளது. பெப்பர் எக்ஸ் பத்து வருடங்களாக‌ எட் குரி (Ed Curri) எனும் ஆராய்ச்சியாளரால் உருவாக்கப்பட்டு வந்தது. இவர் ஏற்கனவே கரோலினா ரீப்பர் எனும் மிளகினை உலகிற்கு வழங்கினார்.

ஆனால் First We Feast தயார்செய்த‌, பெப்பர் எக்ஸ் மிளகாயிலான‌ சாஸ் விறுவிறுப்பாக‌ விற்பனையாகி உள்ளது. வரையறுக்கப்பட்ட எண்ணத்தில் தயார் செய்யப்பட்ட‌ இந்த‌ சாஸ் உடைய‌ காரம் கரோலினா ரீப்பர் சாஸ் விடவும் சூட்டைக்(காரமாக‌) கிளப்பும் என்று கூறப்படுகிறது..


இந்த சிறிய பச்சை மிளகு 3.18 மில்லியன் ஸ்குவில்லே வெப்ப அலகுகள் (3.18 million Scoville heat units) உடன் உலகின் வெப்பமான மிளகுக்கான சாதனையைப் படைக்க‌ உள்ளது. அதே நேரத்தில் கரோலினா ரீப்பர் 1.4 முதல் 2.2 மில்லியன் ஸ்குவில்லை (1.4 to 2.2 million Scovilles) வெப்ப அலகுகள் கொண்டது.
.

பெப்பர் எக்ஸ் (Pepper X) கொண்டு தயார் செய்யப்பட்ட‌ சாஸ் நுகர்வுக்கு பாதுகாப்பானது. முதல் 1,000 பாட்டில்கள் சூடான சாஸ் (The Last Dab hot sauce by Puckerbutt) இரண்டு நிமிடங்களில் விற்றுவிட்டது என்றால் பாருங்களேன். இப்போது பிறீ ஆர்டர் செய்தும் பெறலாம் (available for pre-order).

நாட்டிங்ஹாம் பல்கலைகழகத்தில் தனது சக‌ குழுவினருடன் ஆராய்ச்சியில் ஈடுபட்ட போது இந்த மிளகாயை உருவாக்கியுள்ளதாக ஸ்மித் தெரிவித்துள்ளார். அவர் இந்த மிளகாயை உருவாக்க வேண்டும் என எந்த‌ முன் கருதலும் (திட்டமிடலும்) இல்லாமல் இருந்தார் என்றும் ஒரு அதிர்சியான‌ விபத்தை போலவே இந்த மிளகாயை உருவாக்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.