நெல்லிக்காய்

உணவு

Amla, Indian gooseberry,

மனித‌ உடலின் நலனை காப்பதில் நெல்லிக்காய் பெரும்பங்கு வகிக்கிறது. நெல்லி குளர்காலத்தில் அதிகமாகக் கிடைக்கும் கனிவகையாகும். மருத்துவ‌ பண்புகள் நிறைவாய் கொண்ட‌ கனியான‌ நெல்லியை போன்று மற்றொரு கனியில்லை என்றே கூற‌ வேண்டும். உடலின் ஒட்டுமொத்த வலுவுக்கும் நெல்லி ஒரு காயகல்பமாகத் திகழ் கிறது. லேசாக வெளுத்த பச்சை நிறம் கொண்ட‌ நெல்லி அழகான குத்துக்கோடுகள் அல்லது நீளக்கோடுகள் கொண்டது.

இதனுடைய சுவையில் லேசான அமிலநெடி இருக்கும். நெல்லிக்கனியின் சிறப்பம்சமானது, முடியை வளர்க்கும், விந்துவைக் கூட்டும், ரத்தத்தைச் சுத்திகரிக்கும். கண்பார்வைப் புலனை மேம்படுத்தும். கபம், பித்தம், வாய்வு என்ற மூன்று கோளாறுகளையும் நீக்கும். மனிதனுக்கு இடம், பொருள், காலம், வயதை மீறி என்றுமே பயனளிக்கக் கூடியது. வைட்டமின் சி இக்கனியில் தான் மிக மிக அதிகம். இது மனிதனுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலைக் கூட்டும்.

மேலும், நெல்லிக்கனியில் காலிக் (gallic acid) அமிலமும், அல்புமினும் (Albumin)அடங்கியுள்ளன.ஒரு மனிதனின் ஒரு நாளைய வைட்டமின் சி தேவையின் அளவு 75 மில்லி கிராம். ஒரு நெல்லிக்கனியிலிருந்து கிடைக்கும் வைட்டமின் சி-யின் அளவு 16 வாழைப்பழங்களிலிருந்து கிடைப்பதை விடவும் மூன்று ஆரஞ்சுப் பழங்களிலிருந்து கிடைப்பதை விடவும் அதிகமானதாகும்.

நெல்லிக்காயை சிறுசிறு துண்டுகளாக்கி, கொட்டையை எடுத்தெறிந்துவிட்டு சாறாக்கலாம். நெல்லிக்காயை நறுக்கும்போது இரும்புக் கத்திக்குப் பதிலாக ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கத்தியால் நறுக்கவேண்டும். இரும்புடன் நெல்லி உரசும்போது, அதன் மருத்துவப்பண்பு குறைகிறது. அதிகாலையில், வெறும் வயிற்றில் நெல்லிச்சாறு பருகுவது நல்லது.
நெல்லிக்காயை ஒரே சமயத்தில் அதிகமாகத் தின்ன முடியாது. எனவே, சாறாக்கி அருந்துவது நல்லது. தேனைக் கலந்தும் இதன் சாற்றைக் குடிக்கலாம். வெல்லத்தையும் கூடச் சேர்த்துக் கொள்ளலாம். நெல்லிக்கனியை, சாறாகப் பயன் படுத்துவதுதான் அதை வேறெந்த முறையில் உபயோகிப்பதைக் காட்டிலும் மேலானது.


மருத்துவப் பயன்கள்

இரண்டு மூன்று மாதங்களுக்கு தொடர்ச்சியாக‌ நெல்லிச்சாறு பருகினால் விந்து உற்பத்தி அதிகமாகி ஆண்மை பெருகும் அல்லது விந்து உற்பத்தியினைத் தூண்டி மலட்டுத்தன்மையை நீக்கும். கண் நோய்களுக்கும், பார்வைத் திறனுக்கும் நெ லியைக் கொண்டு நிவாரணம் பெறலாம். சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தரவல்லது. மலச் சிக்கல் நீங்க பெரிதும் உதவுகிறது. ரத்தத்தைச் சுத்திகரிக்கின்றது. நீடித்த செரிமான மின்மைக்கு நல்ல மருந்து. மஞ்சள் காமாலை நோயையும் தீர்க்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். இதயத்திற்கு வலுவைச் சேர்க்கும்.

Indian gooseberry fruit is composed approximately 80% water, with the remaining 20% of the fruit’s composition consisting of carbohydrates, proteins, fiber, and certain vitamins and minerals. One of the most prevalent vitamins in Indian gooseberry is vitamin C. 100-gram Indian gooseberry contains approximately 700 mg of vitamin C. The gooseberry fruit particularly keeps the immune system strong enough to ward off cold and flu viruses, also reduces blood pressure, lowering blood lead levels, and keeps the eyes healthy and functioning well. Additionally, vitamin C acts as an antioxidant, destroying free radicals that can lead to various forms of cancer. Another valuable antioxidant found in Indian gooseberry is gallic acid, which is known as a polyphenol. Gallic acid also works to kill off free radicals in the body.

நாள் : 26.12.2013 திருத்தம் : 26.04.2014