உணவு

Cucumber, indian cucumber

வெள்ளரி பரவலாகப் பயிரப்படும் ஒரு பயிராகும். இதன் காய் பச்சையாக உண்ண வல்லது; சத்து மிக்கது. இது காய்க் கலவையில் (சலாட்டில், Salad) பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. வெள்ளரி பிஞ்சு, முதிர்காய் என‌ இரண்டு வகைப்படும். வெள்ளரிக்காய் ஒரு நல்ல நீரிளக்கியாக‌ செரிமானத்திற்கு உதவுகிற‌து. மேலும் வெள்ளரிப் பிஞ்சு பித்தத்தைத் தணித்து, குடல்களுக்குக் குளிர்ச்சியை ஊட்டுகிறது. சிறுநீரகக் கோளாறு களைச் சரி செய்கிறது. எரிச்சலைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது. தலைச்சுற்றலைத் தடுக்கிறது. சமீபத்திய ஆய்வுகளின் படி, வெள்ளரி மூட்டுவலி வீக்க நோய்கள் ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது எனக் கண்டறியப் பட்டுள்ளது.

எனவே, வெள்ளரி ஒரு முக்கியமான காய்‍-கறியாகும். பொதுவாக, வெள்ளரியைத் துண்டுகளாக நறுக்கித் தின்பர். கோடைக்காலத்தில் வெள்ளரித்துண்டுகளின் மேல் சிறிது மிளகாய்த்தூள் மற்றும் உப்பு தூவி சாப்பிடுவது வழக்கம்.இத்னால் நீர்த்தாகம் தணியும். வெள்ளரி ஊறுகாயாகவும் மக்களிடையே பயன்படுத்தப்படுகிறது.

ஆனால், வெள்ளரியைச் சாறாக பயன்படுத்தும் பொழுது ஏராளமான மருத்துவப் பலன்கள் அதிலிருந்து முழுமையாகக் கிடைக்கும். வெறும் வயிற்றில் காலையில் ஒரு டம்ளர் வெள்ளரிச்சாறு குடித்தால் உடலுக்கு மிக நல்லது. வெள்ளரியில் கலோரிகள் குறைவானதால், உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொள்பவர்களுக்கு நன்றாக ஒத்துழைக்கும். வெள்ளரிச் சாறுடன், விதைகளையும் சேர்த்து உட்கொண்டால் மிக அதிகப் பலன்கள் கிடைக்கும்.

மருத்துவப் பயன்கள்

கீழ்வாதத்தைப் போக்க உதவுகிறது வெள்ளரி. சிறுநீர்க் கோளாறுகளுக்கும் உதவக் கூடியது. நீரிழிவு நோயாளிகளும், உடல் பருமனைக் குறைக்க விரும்புகிறவர்களும் வெள்ளரியை அதிகமாக உட்கொள்வது சாலச் சிறந்தது.

The cucumber originated in India, where a great many varieties have been observed,from Cucumis hystrix. Having an enclosed seed and developing from a flower, botanically speaking, cucumbers are classified as accessory fruits. Many different varieties of cucumber are traded on the global market.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.