உணவு

Coconut

முதன்முதலில் தேங்காய் விளைந்த இடமாக இந்தியக் கடலோரம் மற்றும் பசிபிக் கடல் பகுதிகள்தான் அறியப்பட்டன‌. இன்று உலகளவில்
தேங்காய் விளைவிக்கப்பட்டு உபயோகிக்கப்படுகிறது. மேலும் தேங்காய் சில‌ இனத்தவரின் விசேஷ‌ உணவாகவும், சேர்ப்பு கலப்பியாகவும் விளங்குகின்றது. தேங்காயானது முற்றும் முன்னரே பெற‌ப்படும் இளந்தேங்காய் (அ) இள‌நீரானது தாகத்தை அடக்கி, சிறுநீரின் நிறத்தை இயல்பாக்கி, நீர் இளக்கித் தன்மையுடைய‌ அருமருந்தாகும். தேங்காய்க்குள் பருப்பு வராத சமயத்திலுள்ள நீர் சற்றே கசப்பு அல்லது ருசியின்றி லேசாக உப்புக் கரித்துக் கொண்டிருக்கும். பருப்பு வரத் தொடங்கியதும், வழுக்கையாகும் தருணத்தில் நீர் இனிப்பாக, இளநீராகும். இந்த இளநீரில் உள்ள சர்க்கரை உடனடியாக உறிஞ்சப்படத்தக்கது. சுத்தமானது, கிருமிகள‌ற்றது.

மருத்துவப் பயன்கள்

சிறுநீரகக் கோளாறுகளுக்கும், சிறுநீரகக் கற்கள் பிரச்சினைக்கும், இளநீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில், இளநீர் மிக நல்ல நீரிளக்கி ஆக இருப்பதுதான். இள‌நீர் மஞ்சள் காமாலை, சின்னம்மை, பெரியம்மை போன்ற‌ நோய்களால் ஏற்படும் வயிற்றுப்புண்கள் மற்றும் வலிகள், மேலும் உடலின் வெப்பத்தினை கட்டுப்படுத்தும் அரிய‌ மருந்தாகும். காலராவுக்கு சிகிச்சையளிக்கும்போது இளநீர் அருந்துவது பயன்தரும். காலராவின்போது, வாந்தி பேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே, முக்கியமான தாது உப்புக்களும் வெளியேறிவிடும். இது சில சமயம் மரணத்திற்கும் ஏதுவாகும். இந்தச் சமயத்தில் இளநீரிலுள்ள உடலுக்கு நீர்த்தன்மையைத் தருவதோடு, தேவையான தாது உப்புக்களையும் சேர்க்கும். மேலும், இளநீரின் நோய்க்கிருமி எதிர்ப்புச் சக்தியானது கெட்ட பாக்டீரியாக்களை எதிர்ப்பதால், குடலிலுள்ள காலரா கிருமிகளை வெளியேற்றவும் செய்யும். ஊசி மூலம் காலராவுக்காக பொட்டாசியத்தை உடலில் ஏற்றுவதைவிட இளநீரிலுள்ள பொட்டாசியம் மிகுந்த மருத்துவப் பயனுடையது என‌ வெப்ப நாடுகளின் மருத்துவ நிபுணர்கள், மருத்துவ விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். இளநீரிலுள்ள வைட்டமின் "பி" கலவைச் சத்து இதயத்தை பலமாக்கும். நரம்பு மண்டலத்திற்கு ஊட்டமளிக்கும். செரிமான மண்டலத்தையும் செயல்துடிப்போடு சீராக்கும்.

No fruit can beat tender nut

Tender nut, God’s gift as a natural drink. Tendernutconstitutes sugars as an important constituent of water. The tender coconut water contains minerals such as potassium, sodium, calcium, phosphorus, iron, copper, sulphur and magnesium. Coconut water contains small amounts of protein. Tender coconut water contains both ascorbic acid and vitamins of B group. Water of unripe nut contains 0.12 per cent fat and the water of ripe nut contains 0.15 per cent fat. The coconut water is sweet to taste and has got numerous medicinal properties such as good for feeding infants suffering from intestinal disturbances, Oral rehydration medium, contains organic compounds possessing growth promoting properties, keeps the body cool.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.