உணவு

Carrot, orange raddish

மஞ்சள் முள்ளங்கி (அ) செம்மங்கி எனப்படும் கேரட் சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் நீளமான கூம்பு வடிவில் கிழங்கு போல் வேரில் திரண்டு பருத்து வளரும் ஒரு வேர்க்காய் வகை ஆகும்.
ஐரோப்பா, வடக்கு ஆசியா, அபிசீனியா, வடக்கு ஆப்பிரிக்கா, காஷ்மீர் பகுதிகளில் காரட் விளைந்ததாக வரலாறு உள்ளது. இன்று உலகம் முழுவதும் முழுக்க எல்லா இடங்களிலும் காரட் விளைகிறது. காரட் வேர் உள்ள கிழங்கு வகை யாகும். ஒரு அடி நீளம் உள்ள காரட்டுகளும் உண்டு. தில்லி காரட்டுகள் நன்றாகவும், சுவையாகவும் இருக்கும்.

காரட் லேசான இனிப்பும், பசியைத் தூண்டுவதாகவும், நீர் இளக்கியாகவும் செயல் படும் தன்மையும் கொண்டது. பவுத்திரத்துக்கும், வயிற்றுக் கடுப்பு, வயிற்றில் பூச்சித் தொல்லைகளுக்கும் மருத்துவ ரீதியான பலன்களைத் தந்து உதவுகிறது. இருமலைப் போக்கும். இதை மிக அதிகமாகத் தின்றால் பித்தமாகும்.

வைட்டமின் சி, வைட்டமின் டி, நியாசின், பைரிடாக்சின், ஃபோலிக் அமிலம், பயாடின், பென்டோதினிக் அமிலம் மற்றும் பொட்டாசியம், சோடியம், மக்னீசியம், தாமிரச்சத்துக்களும் காரட்டில் குறைந்த அளவு உள்ளன.

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரி மானம் ஆகக் கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு நாளைக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். உருளைக் கிழங்கை விட ஆறுமடங்கு கால்சியம் காரட்டில் உள்ளது. வளரும் குழந்தைகள் தினமும் காரட் சாறு குடித்தால் அது முழுமையான உணவாகும். கால்சியம் மற்றும் கரோட்டின் சத்துக்கள் நிறைய உள்ளன. கரோட்டீனை, கல்லீரல் வைட்டமின் ஏ-ஆக மாற்றிச் சேமித்துக் கொள்கிறது.

பயன்கள்

காரட்டை மென்று தின்றால் பற்கள் பலப்படும். வாய், ஈறு சுத்தமாகும், சிறிதளவு உப்பு சேர்த்து காரட் சீவலுடன் சாப்பிட்டால் எக்சீமா குணமாகும். கண்களின் நலத்தைக் காப்பதில் காரட்டிற்கு ஈடில்லை. டோகோகிளின் என்கிற ஹார்மோன் காரட்டில் உள்ளது. இன்சுலின் போன்றதான இது, நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது.
அமெரிக்காவின் தேசியப் புற்றுநோய்க் கழகம், 1962 வாக்கில் தேசிய இதய, நுரையீரல், ரத்தக் கழகங்களுடன் இணைந்து நாடு தழுவிய மருத்துவப் பரிசோதனை இயக்கம் ஒன்றை நடத்தியது. 22,000 அமெரிக்கவாசிகளுக்கு காரட்டுகளையும், பச்சைக் காய்கறிகளையும் கோடி ரூபாய்களை இதற்காக அமெரிக்க அரசாங்கம் செலவழித்தது.

காரட் கெட்ட பாக்டீரியாக்களை, குடல்களிலிருந்து அழித்து வெளியேற்றுகிறது. குடல் நோய்களிலிருந்து காரட் சாறு காக்கிறது. குணமாக்குகிறது. குடல் புண்ணை ஆற்றுகிறது.
சிறுநீரகக் கோளாறுகளில், குறிப்பாக நெப்ரிடிஸ் கோளாறுகளின் போது காரட் சாறு தரலாம். ஏனெனில் காரட் நல்ல நீரிளக்கி, சிறுநீர் சரியாகப் போகாதவர்களும் காரட் ஜுஸ் குடிக்க வேண்டும். உடலிலுள்ள தேவையற்ற யூரிக் அமிலத்தை காரட் வெளியேற்றுவதால், மூட்டுவலி, கீல்வாத நோய்கள் குணமாக உதவுகிறது. பித்தப்பைக் கற்களைக் கரைப்பதுடன், கல்லீரல் கோளாறுகள், நெஞ்சக நோய்கள், சரியாகவும் ரத்தம் வெளியேறாத மாதவிலக்கு ஆகியவற்றுக்கும் காரட் உண்பது நோயை குணப்படுத்தும் சிறந்த வழியாகும். காரட்டில் அதிகமாக வைட்டமின் ஈ உள்ளதாக ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

இந்த வைட்டமின் ஈ உடலுக்கும் மிகவும் நலம் பயக்கக்கூடியது என்று பிரபல சத்துணவு நிபுணர்கள் கருதுகிறார்கள். இது மலட்டுத் தன்மையைப் போக்க மிகவும் உதவுகிறதாம். புற்றுநோய் செல்களை ரத்தத்தில் உயிர்வாழாமல் செய்கிறது. இந்த வைட்டமின் ஈ, புற்றுநோய் வராமலும் காக்கிறது என்று விலங்குகளுக்கு அதிக அளவு உணவாகக் காரட்டைக் கொடுத்து கண்டறிந்துள்ளார்கள். இது மனிதர்களுக்கும் பொருந்துகிறது என்றும் நிச்சயம் தினம் ஒரு காரட், புற்றுநோயை அண்டவிடாது என்றும் இயற்கை மருத்துவ உலகம் உறுதிபடக் கூறுகிறது.

The carrot is a biennial plant growing up to 1 m tall that flowers from June to August. Carrots can be eaten in a variety of ways. Only 3% of the β-carotene in raw carrots is released during digestion: this can be improved to 39% by pulping, cooking and adding cooking oil. Alternatively carrots can be chopped and boiled, fried or steamed, and cooked in soups and stews, as well as baby and pet foods.

Carrot is one amongst the top-ten most economically important vegetables crops in the world. In 2011, according to the Food and Agriculture Organization of the United Nations, 35.658 million tonnes of carrots and turnips were produced worldwide for human consumption, grown on 1,184,000 hectares (2,926,000 acres). With 16.233 million tonnes, China was by far the largest producer and accounted for 45.5% of the global output, followed by Russia (1.735 million tonnes), the United States (1.342), Uzbekistan (1.222), Poland (0.887), Ukraine (0.864), and the United Kingdom (0.694). About 61% of world carrot production occurred in Asia, followed by the Europe (24.2%) and the Americas (North, Central, and South America and the Caribbean) (9.7%).

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.