சுவிக்கி (Swiggy) உணவு டெலிவரியின்போது "சர்ஜ் ஃபீ" வசூலிப்பது எதற்காக ?
ஆன்லைன் வழியாக ஆர்டர் பெற்று உணவு விநியோக சேவை (Online food delivery service, Swiggy) வழங்கிவரும் சுவிக்கி "சர்ஜ் ஃபீ (surge fee)" என தனது ஆப் இல் காண்பிப்பது எதற்க்காக ?. இது சிலருக்கு தெரியாதிருக்கலாம். எதற்காக இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது, என்று ?.
உண்மையில் சர்ஜ் ஃபீயானது வழங்கப்படும் உணவு பொருட்களுக்கு தலா 20 ரூபாய், 25/ 30 ரூபாய் என வசூலிக்கப்படுகின்றது. விடுமுறை தினங்கள், திருவிழாக்கள் மற்றும் மழை நாட்களில்
(weekends, holidays, rainy days) சிரமங்களை ஏற்று உணவுதனை டெலிவரி செய்கின்ற ஊழியர்களுக்கு இந்த கட்டணமானது போய் சேர்கின்றது.
உத்தரவாத-கனமான நாட்களில் வேலை செய்யும் ஊழியர்களை ஊக்கமளிப்பதற்கு ஊக்கமளிப்பு ஊதியம் (பொதுவாக இது வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள் போன்றவை) வழங்க இந்த "சர்ஜ் ஃபீ (surge fee)" சேகரிக்கப்படுகின்றது.
சர்ஜ் ஃபீ கட்டணமானது முதலில் பெங்களூரிலும் ஹைதராபாத்திலும் பின் புனே, மும்பை, சென்னை, டெல்லி உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் இந்த திட்டமாந்து விரிவுபடுத்தப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.