மே 1 முதல் மிந்திராவின் வலைத்தள சேவை நிறுத்தம்

Software

Myntra will shut down its desktop website from May1,2015

மிந்திராவின் (Myntra) டெஸ்க்டாப் வலைத்தள‌ சேவையானது மே1,2015 லிருந்து நிறுத்தப்படும் என‌ அறிவித்ததுடன் அதன் ஆப் சேவைகளை இனிமுதல் பயன்படுத்த ஆப்களை டவுன்லோட் செய்யுங்கள் என‌ த‌னது பயனாளர்களைக் கேட்டுகொள்கிற‌து. (ஆதாரம்: எக்ணாமிக் டைம்ஸ் பக்கம்)

இணையதளத்தில் நவ‌ நாகரீக‌ உடைகள், காலணிகள், அழகு பொருட்கள் போன்ற‌வற்றை சில்லறையாக‌ விற்பனை செய்யும் மிந்திரா நிறுவனம் இனிமுதல் மொபைல் ஆப்களை மையமாகக் கொண்டு விற்பனை செய்ய‌ உள்ளது. ஆகவே தனது டெஸ்க்டாப் இணையதள‌ சேவையினை கைவிடும் நோக்கோடு மே1 முதல் நிறுத்த‌ உள்ளது.

முன்னதாக‌ ஜூலை 2014ல் மிந்திரா சேவையினை ஃபிலிப்கார்ட் நிறுவனம் வாங்கிக்கொண்டது. ஃபிலிப்கார்ட் மற்றும் மிந்த்ரா தனது மொபைல் வலைதள‌ சேவையினை முன்னரே நிறுத்திக்கொண்டதுடன் தங்களுடைய‌ ஆப் களை கூஃகிள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர்களிலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளுமாறு பயனர்களைக் கேட்டுக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது..

நாள் : 18.04.2015 திருத்தம் : 19.04.2015