Income Tax Department, MUmbai
பணம் முதலீடு

Over 11.44 lakh PAN cards had been deactivated: How to check whetther your PAN is valid

11.44 லட்சம் நிரந்தர கணக்கு எண் (PAN கள்) அட்டைகள் இந்திய‌ அரசாங்கத்தால் செயலிழக்கம் செய்யப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களவைக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கையில் நிதி அமைச்சக அமைச்சர் திரு. சந்தோஷ் குமார் கங்கர் இதனை அரசுக்குத் தெரிவித்தார்.

உஷார் !!!

ஒரு நபருக்கு பல பான் அட்டைகள் ஒதுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்ட வழக்குகளும் மற்றும் இல்லாத ஒரு நபருக்கு தவறான அடையாளங்களுடன் வழங்கப்பட்ட பான் அட்டை வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சில நபர்களின் PAN அட்டை விவரங்கள் போலி அடையாளங்களை உருவாக்குவதற்காக‌ பயன்படுத்தப்பட்டுள்ளதையும் கண்டறிந்துள்ளனர்.

PAN ஐ நீக்க அல்லது செயல்நீக்கம் செய்வதற்கு விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் உங்களது மதிப்பீட்டு அதிகாரியால் பரிசீலனை செய்யப்படும்.

PAN அட்டைகளின் செல்லுபடியாக்கத்தைப் பற்றி குழப்பத்தை உருவாக்கியுள்ளதா ?? . உங்கள் PAN அட்டை செல்லுபடியாகுமா அல்லது இல்லையா என்பதை சரிபார்க்கும் வழிகளை கீழேப் பார்க்கவும்.

How to check whether your PAN is valid

1

www.incometaxindiaefiling.gov.in இணையதளத்திற்குச் செல்லவும். 'Services' பிரிவின் கீழ் இடது நெடுவரிசையில் இருக்கும் 'Know your PAN' என்பதைக் கிளிக் செய்யவும்.


2

'Know your PAN' பட்டனை கிளிக் செய்தவுடன் --- பெயர், நிலை, பிறப்பு தேதி மற்றும் தொடர்பு எண் போன்ற உங்கள் விவரங்களை நிரப்ப வேண்டிய ஒரு பக்கத்திற்கு நீங்கள் திருப்பி விடப்படுவீர்கள்.


3

தேவையான விவரங்களை சமர்ப்பித்ததும், நீங்கள் கொடுத்த‌ மொபைல் எண்ணிற்கு OTP ஐ எண்ணை பூர்த்தி செய்ய‌ மற்றொரு பக்கத்திற்கு நீங்கள் திருப்பி விடப்படுவீர்கள்.


4

மொபைல் எண்ணிற்கு வந்த‌ OTP ஐ உள்ளிடவும். பின், 'Validate' என்பதை கிளிக் செய்யவும்.


5

உங்கள் PAN அட்டை விவரங்கள் மற்றொருவருக்கு வழங்கப்படாவிட்டால் அல்லது பல நபர்களுக்கு வழங்கப்படாவிட்டால், கடைசி பக்கத்தில் உங்களுடைய PAN அட்டை விபரத்தில் 'Active' என்பதைக் காண்பிக்கும்.


6

ஆனால் உங்களுடைய‌ PAN அட்டை விபரத்துடன் மற்றொரு அட்டை இருந்தால், "There are multiple records for this query. Provide additional information. (இந்த வினவலுக்கான பல பதிவுகள் உள்ளன)" என்கின்ற‌ தகவலினைத் தரும். உங்கள் தந்தையின் பெயரையும் பிற அடையாள விவரங்களையும் வழங்க வேண்டும்.