பூமி

Facts About Dubai, the land of dreams and luxury

சொகுசு நகரம் துபாய் பற்றி நாம் தெரிந்து கொள்ள‌ வேண்டிய‌ உண்மைகள்

01

துபாய் வெகுவிரைவில் மாற்றம் கண்டுகொள்ளும் நகரம். கீழேக்காணும் படங்களைப் பார்த்தால் புரியும்.

Dubai City in 1990 and 2014

1968 இல் 13 கார்கள் மட்டுமே துபாய் நகரத்தில் இருந்தன. இன்று நகரின் போக்குவரத்துக்காக‌ டபுள் டெக்கர் சாலைகள் கட்ட வேண்டிய நிலை.

துபாய் நகரின் பயணிகள் இருக்கையில் காட்டு விலங்குகளைக் கூட‌ பார்க்க முடியும். உங்கள் இருக்கையின் அருகே ஒரு சிறுத்தை இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!
Cheetah travelling with car owner


02

துபாய் புதிதாக, காலநிலை கட்டுப்படுத்தப்பட்ட‌ உட்புற நகரம் ஒன்றினை 50,000,000 சதுர அடி அள‌வில் அமைத்து வருகிறது.

துபாய் நகரில் எங்கு பார்த்தாலும் ஏர் கண்டிஷனர்கள் (காற்றுச்சீரமைப்பிகள்) காணப்படும். தெருக்களில் வெளியே கூட ஏசி காணப்படும். ‍ அனைத்தும் வசதிதான் காரணம்!


03

துபாய் அதன் செயற்கை பாம் தீவுகள் கட்டுவதற்கு 2.5 எம்பயர் ஸ்டேட் கட்டிடங்கள் நிரப்ப போதுமான மணலினை இறக்குமதி செய்துள்ளது. 37 மில்லியன் கன‌ மீட்டர் மணல் எம்பயர் ஸ்டேட் கட்டிடம் நிரப்ப‌ தேவைப்படுகிறது.

Palm land layout dubai

எண்ணெய் விற்பனையால் துபாய் பெறும் பொருளாதார வருமான‌ம் 6% மட்டுமே. துபாயின் முக்கிய பொருளாதார‌ கார‌ணியாக‌ விளங்குவது ரியல் எஸ்டேட் மற்றும் சுற்றுலா ஆகும்.


04

துபாய் மக்கள் தொகையில் சுமார் 85% மக்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலானவர்கள் நல்ல ஊதியத்திற்காக‌ வேலை தேடி, இந்தியா, பாக்கிஸ்தான் மற்றும் வங்காளதேசத்திலிருந்து வருகிறார்கள்.


05

துபாய் நகரில் ரோபோக்கள் பல‌ மில்லியன் டாலர்களுக்காக‌ ஒட்டக ஓட்டப்பந்தய போட்டிகளில் பங்கேற்கின்றன‌. ஒட்டக பந்தயத்திற்கான‌ ஒரு ரோபோ விலை 300 முதல் 10,000 அமெரிக்க டாலர் வரை.

புர்ஜ் கலீஃபா (Burj Khalifa) வானளாவிய‌ கட்டிடம் மிக‌ உயமானதால் அதில் குடியிருக்கும் மக்கள் ரமலான் விரதத்தை முடிக்க‌ நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதிருக்கும். புர்ஜ் கலீஃபாவில் 150வது மாடி மற்றும் அதற்கு மேலுள்ள‌ மாடிகளில் இருக்கும் மக்கள் மற்றவர்களை விட சூரியனை நீண்ட‌ நேரம் பார்க்க‌ முடியும்.
Tallest building burj khalifa in the world


06

2013 ஆண்டின் தங்க விற்பனையில் 40% விற்பனையானது துபாயில் நிகழ்ந்தது. இதன் எடையை மொத்தமாக‌ சேர்த்தால் 354 யானைகளின் எடையை விட‌ அதிகம்.
2013 ல் மட்டுமே, துபாய் நகரில் உள்ள தங்க விற்பனை $ 70 பில்லியன். அதன் எடையோ 2,250 டன்.
Gold Shops in Dubai Airport

துபாயின் பிரபலமான பூர்ஜ் அல் அராப் ஹோட்டலின் (Burj Al Arab hotel) ராயல் சூட் ஒன்றில் ஓரிரவு தங்குவதற்கான‌ விலை $ 20,000. இது பல நாடுகளைச் சுற்றிப் பார்க்கப் போதுமான பெரிய விலை தான்!. மேலும் இந்த‌ ஹோட்டலின் 39% இடங்கள் உபயோகமற்றதாகவே உள்ளன‌.

புர்ஜ் கலீஃபா (Burj Khalifa) சுமார் 90 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தும் வெட்டவெளியாகக் காணலாம். ஒரு தெளிவான வானிலையுடைய‌ நாளில் நீங்கள் மக்காவில் இருந்து (Jeddah‍=ஜெட்டாவில் இருந்தால்) புர்ஜ் கலீஃபாவின் கோபுரத்தினைப் பார்க்கலாம். புர்ஜ் கலீஃபா (Burj Khalifa) மேகங்களை விட அதிக உயரமானது!


07

உலகின் மிக உயரமான‌ டென்னிஸ் கோர்ட் துபாயில் அமைந்துள்ளது. அது மிகவும் ஆடம்பரமான ஹோட்டலான‌ பூர்ஜ் அல் அராப் மேலே கட்டப்பட்டுள்ளது. ஒருமுறை இந்த‌ டென்னிஸ் கோர்ட் அன்ட்ரே அகாசி மற்றும் ரோஜர் பெடரர் இடையே நடந்த போட்டிக்காக‌ பயன்படுத்தப்பட்டது. சில நேரங்களில் அது ஒரு ஹெலிபேடாகவும் பயன்படுத்தப்படும்.

துபாயில் பேருந்து நிறுத்தங்கள் அனைத்தும் காற்று கட்டுப்படுத்தப்பட்டு முழுதும் கண்ணாடியால் மூடப்பட்டிருக்கும். பொறுத்துக் கொள்ள முடியாத வலிய வெப்பம் மற்றும் அதிக ஈரப்பதம் காரணமாக அவை தேவைப்படுகின்றன‌.
Bus Stops built in dubai

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.