வெளியிட்ட தேதி : 09.04.2015
Gears

New Stand alone Web version of Messenger App from Facebook

பேஸ்புக் தனித்தியங்கும் மெசஞ்சர் ஆப்பினை அறிமுகம் செய்துள்ளது. பேஸ்புக்கின் மெசஞ்சர் வலை உலாவி பதிப்பு ( web browser version) மெசஞ்சர் கைபேசி பதிப்பினைப்போல‌ வலை உலாவி பதிப்பும்
பேஸ்புக் இணையதளத்திலிருந்து தொடர்பில்லாது மாறுபட்டதாகவே உள்ளது. மெசஞ்சர் ஆப்பினைப்போன்ற‌ தோற்றமும் கட்டமைப்பையும் கொண்டுள்ளது.

சில‌ நாட்களுக்கு முன்னதாக‌ மெசஞ்சர் சாட் () வசதி பேஸ்புக் இணையதளத்திலிருந்து நீக்கப்பட்டு ஃபோன் ஆப்() ஆக‌ மாற்றம் கண்ட சமயத்தில் பல‌ பயனர்களின் புகார்களுக்கு ஆளானது. குறிப்பாக‌ சேட் வசத்திக்காக‌ ஃபேஸ்புக் பயனர்களை வலுக்கட்டாயமாக‌ ட்வுண்லோடு செய்யக் கேட்டுக்கொள்கிறது என்ற‌ புகார் எழுந்தது. இக்காரணத்தினால் ஃபேஸ்புக் தனது மெசஞ்சர் வலை உலாவி பதிப்பினை பயனர்கள் விருப்பத் தேர்வாக‌ வெளியிட்டுள்ளது. பயனர்கள் மெசஞ்சரின் இருவகைப் பதிப்பினில் எதைவேண்டுமானாலும் தேர்ந்தெடுத்து பிரயோகம் செய்துகொள்ளலாம் என‌ பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.