ஃபேஸ்புக்கின் "Like"களை கண‌க்கில் கொள்வதில் மாற்றம்

Facebook Like count get changes in the way of counting

பேஸ்புக் (facebook) தனது லைக்குகளை எண்ணங்களாகக் கொள்வதில் புதிய‌ மாற்றங்களைக் கொண்டு வருவதாக‌ அறிவித்துள்ளது. இம்மாற்றங்கள் பிரபலங்கள் மற்றும் வர்த்தக / வியாபார‌ப் பக்கங்களுக்கு மாத்திரமே பொருந்தும்.

ஃபேஸ்புக் இனிமுதல் முடக்கப்பட்ட‌ பயனர் மற்றும் காலஞ்சென்ற‌ பயனர்களின் லைக்குகளை கணக்கினில் சேர்த்துக்கொள்ளாது. இதன்மூலம் வர்த்தக‌ / வியாபார‌ ஃபேஸ்புக் பயனர்களுக்கு மிகத் துல்லியமான‌ ஃபேஸ்புக் பார்வையாளர்களை கண்டறிய‌ முடியும்.


மேலும் சுயமாக ஃபேஸ்புக் கணக்கினை முடக்கின‌ நபர் மீண்டும் கணக்கினைப் புதுப்பித்து செயல்படுத்திய‌ பின்னர் ஒரு ஃபேஸ்புக் பக்கத்திற்கு லைக் கொடுத்தால் அது லைக் கண‌க்கின் மொத்தத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்.

வெளிப்படையாகச் சொன்னால் இம்மாற்றங்களினால் பயனடையப் போவது வியாபார‌ / வர்த்த‌க‌ பயனாளர்களே.

நாள் : 06.03.2015 திருத்தம் : 14.04.2015

புதியவை / Recent Articles