Facebook to drop on-site political campaign support
Gadgets

Facebook to drop on-site political campaign support

பேஸ்புக் அரசியல் பிரச்சாரங்களுக்கான (facebook political campaigns) நேரடியாக (ஆன்-சைட்) தனது ஊழியர்களை அனுப்புவதற்குப் பதிலாக ஆன்லைன் போர்டல் மூலம் வேட்பாளருக்கான ஆதரவினை வழங்குவதற்கு கவனம் செலுத்த உள்ளது. இதன் மூலம் உலகளவில் மேலும் பல வேட்பாளர்களுக்கு (election candidate) ஆதரவு வழங்க முடியும் என ஃபேஸ்புக் கூறுகிறது.

2016 இல் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், டோனால்ட் ட்ரம்பின் (Donald Trump) பிரச்சாரங்களுக்கென தனது ஊழியர்களை நேரடியாக அனுப்பியது போல, இனிமுதல் தேர்தல்களுக்கு முன்னதாகச் செய்யப்படும் அரசியல் பிரச்சாரங்களுக்கு தனது அலுவலக ஊழியர்களை அனுப்பாது என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

டோனால்ட் ரம்பின் டிஜிட்டல் இயக்குனர், 2016 இல் நடைபெற்ற US President தேர்தலில் ட்ரம்பின் வெற்றிக்கு பேஸ்புக் பெரிதும் உதவியதாக செய்தி வெளியிட்டிருந்தார்.

தேர்தலில் போட்டியாளரான ஹிலாரி கிளிங்டனும் அதேயளவான ஆதரவு பெற்றிருந்தாலும் அவர் வீழ்ச்சியையே சந்திக்கநேரிட்டதாக பேஸ்புக்கும் தெருவித்திருந்தது.

கூஃகுளுக்கு அடுத்தபடியாக விளம்பரதாரராக சமூகவலைத் தளங்களே உள்ளன. சமூகவலைத் தளங்களுள் ஃபேஸ்புக் முதலிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுபோல ட்விட்டரும், ஏனைய தளங்களும் அரசியல் பிரச்சாரங்களுக்கென சிறப்பு ஆலோசனைகளை வழங்கிவருகின்றன.

ஆகவே வரும் நாட்களில் ஃபேஸ்புக் நிறுவனம் அரசியல் பிரச்சாரங்களுக்குப் பதிலாக தனது வலைப்பக்கத்திலிருந்து எல்லா அரசியல் கட்சிகளுக்கும் இலவச விளம்பர ஆலோசனைகளை வழங்கக்கூடும் என தெரிவித்துள்ளது.