Facebook Mobile App
Gadgets

Facebook data breach: Hackers entered using VIEW AS feature

தொடர்ச்சியாக பேஸ்புக் நிறுவனம் எதிர்கொண்டுவரும் சிக்கலினால், 220 கோடி மக்களின் பேஸ்புக் கணக்கை லாக் அவுட் செய்து மீண்டும் லாக் இன் (Log out and login into facebook account) செய்ய ஃபேஸ்புக் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் கடந்த வாரம் இறுதியில் (செப். மாத இறுதி) உலகின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள 9 கோடி பயனர்களின் பேஸ்புக் கணக்கு விவரம் ஹேக் (Facebook Account Hacked) செய்யப்பட்டது.

ஹேக்கர்கள் பேஸ்புக்கின் "வியூ அஸ் (VIEW AS)" அம்சத்தைப் பயன்படுத்தி ஃபேஸ்புக்கினுள் நிழைந்து ஹேக்கிங்க் செய்துள்ளனர். "வியூ அஸ்" என்பது நம்முடைய பேஸ்புக் கணக்கை, வேறு ஒருவர் எப்படி பார்க்கிறார் என்று பார்க்கும் வசதியாகும். பயனர்கள் தங்கள் சுயவிவரத்தை மற்றவர்களின் பார்வைக்காக வைக்கும் முன்னர் தங்க்களது விபரங்களை சரிபார்க்கும் வசதியெனவும் கொள்ளலாம். இவ்வசதியில் இருந்த சில கோடிங் (Coding) குறைபாடுகள் காரணமாக இந்த ஹேக்கிங் பிரச்சனை எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

நீங்கள் இப்போது "வியூ அஸ்" அம்சத்தை அணுக முயற்சித்தால், "எனது சுயவிவரத்தை முன்னோட்டமிடுக" அம்சம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து பிறகு முயற்சிக்கவும்." ( “The “Preview my Profile” feature is temporarily disabled. Please try again later.”) என்கின்ற ஒரு செய்தியை நீங்கள் காண்பீர்கள்.

வியூ அஸ் வசதியை வழி உள்நுழைந்த ஹேக்கர்கள் (Facebook data breach) 9 கோடி பேரின் பேஸ்புக் கணக்குகளை திருடி உள்ளனர்.

தற்பொழுதைய பிரச்சினையினையும், சூழலையும் பேஸ்புக் சரி செய்துள்ளது என்றாலும் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு பயனர்கள் தங்களது பாஸ்வேர்டை மாற்ற ஃபேஸ்புக் கேட்டுள்ளது. இதற்காக 220 கோடி பேரிடம் பேஸ்புக்கை ஒருமுறை லாக் அவுட் செய்துவிட்டு லாக் இன் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையினை ஃபேஸ்புக் விடுத்துள்ளது.