அதி பயங்கரமான‌ வலி உலகின் மிகப்பெரிய எறும்பினால் உண்டாகிறது

Bullet Ant stings
சுற்றுச்சூழல்

The worst Pain in world caused by sting of a bullet ant

Worst Pain In the world can be caused by this Bullet Ants

Bullet ants are the natives of western rain forests of South America and its sting is believed to be thirty times more painful than a bee’s. The worst pain known to man in the world is caused by this big ants. For a group of tribesmen of the Satere-Mawe in Brazil, the reward for wrestling with the bullet ant is manhood.

நீங்கள் உணர்ந்த‌ மிகவும் மோசமான வலியினை கற்பனை செய்துகொள்ளுங்கள். இப்போது, அதை மும்மடங்காய் (Triple it) யோசியுங்கள். "போதுமடா சாமி",. கொடுமையானது போல் தெரிகிறதா. ஆம், நம்பமுடியாததுதான், ஆனால் உண்மை!. உலகின் மிக பெரிய எறும்பான‌ புல்லட் எறும்பு (Bullet ants) கடித்து (குடைந்து) உண்டாகும் வலி உயிரைப்பறிக்கும் அளவுக்கு மோசமானது.

தென் அமெரிக்காவின் மேற்கு மழைக்காடுகளில் காணப்படும் இந்த பூச்சி ஒரு தேனீ கொட்டுவதால் உண்டாகும் வலியை விட‌ முப்பது மடங்கு அதிகமான‌ வலி இருக்கும் என்று நம்பப்படுகிறது.

தேனீ (Bee) போன்றது, என்றாலும் புல்லட் எறும்புகள் (Parponera clavata) பயமுறுத்தினால் மட்டுமே அதன் வலிமையான விஷத்தினை பாதுகாப்பிற்காக‌ வெளியிடும். மற்ற எறும்புகள் போலல்லாமல், ஒவ்வொரு எறும்பு கூடுகளிலும் வழக்கமாக சில நூறு மட்டுமே காணப்படும். கூடுகளை பொதுவாக மரங்களின்ள் அடிவாரத்தில் அமைத்துக்கொள்ளும். பணியாள் எறும்புகள், மரங்களில் உணவினைத்த்தேடிக்கொள்ளும், சில‌ நேரங்களில் காட்டில் உணவினைத்தேடி வேட்டையாடும். (சிறு பூச்சிகளை உண்ணும்)

புல்லட் எறும்புகள் காட்டுவாசி பழங்குடியினரின் வீரத்தின் அடையாளமாய் விளங்குகிறது. பிரேசில் நாட்டின் சாட்டேர் மாவெ (Satere-Mawe) என்ற பழங்குடியினரைப் பொறுத்த வரை, புல்லட் எறும்புகள் மல்யுத்தத்தின் வெகுமதியாக‌ ஆண்மையின் சின்னமாய் விளங்குகிறது.

இப்பழங்குடியினரைப் பொறுத்தவரையில் ஒரு போர்வீரன் ஆக‌ விரும்புபவன், இளம் சிறுவர்கள், பல புல்லட் எறும்புகள் உள்ளே நிரப்பப்பட்ட கையுறைகளை அணிய வேண்டும். அணிந்துகொண்ட‌ முழு நேரத்தில், அவர்கள் ஒரு அமைதியான மன நிலையினை பராமரிக்க வேண்டும். ஆயத்தமானவர் குறைந்தபட்சம் 20 முறைவரை மீண்டும் திரும்பசெய்தல் வேண்டும். இச்செயல் ஆண்மையை நிரூபிக்கும் விலையாகாக் கருத்ப்படுகிறது. ஒவ்வொரு முறை புல்லட் எறும்பு கை உறை அணியும் போதும், கைகளில் பெருத்த‌ காயம், கை முடக்கப்பட்ட‌ நிலையினை அடைகின்றனர்.

நாள் : 10.06.2016 திருத்தம் : 20.09.2016