வெளியிட்ட தேதி : 13.05.2016

Surprise for Shoppers With Fake Leather Accessories

இதுபற்றிய‌ புத்தகம் PETA Asia

.

மிருகங்கள் வதைபடுவதைத் தெரிந்தும் பலர் உண்மையான‌ தோல் பொருட்கள் வாங்கும் போது கண்மூடித்தனமாக‌ வாங்கிவிடுகின்றனர். பாங்காங்கைச் சேர்ந்த‌ ஓகில்வி & மாதர் விளம்பரம் ( Ogilvy & Mather Advertising) மற்றும் PETA ஆசியா ( PETA Asia) நிறுவனம் இந்த மனப்பான்மையினை மாற்ற‌ (இணைந்து) திட்டமிட்டது.

இவர்கள் பாங்காங்கின் (Bangkok‍) பெரும் நவநாகரீக வணிக வளாகமொன்றில் ஒரு தற்காலிக (போலியான‌) கடை ஒன்றினைத் திறந்து அதில் வெளித்தோற்றத்தில் ஆடம்பர தோல் பொருட்களை விற்பனைக்காக‌ வைத்தனர். திகிலூட்டும் இரகசியம் தோல் பொருட்களின் உள்ளே ?????.

பைகள், காலணிகள், பணப்பைகள், மற்றும் இதர தோல் பொருட்களின் உள்ளே திறந்து பார்ப்பவர்கள் கண்டது கோரக் காட்சி !!. அவற்றினுள், போலியான‌ விலங்கு மாமிசம், இரத்தம் என‌ கொலைவெறிக் காட்சிகள்!!. ஏன் ? ஒரு பையில் துடிக்கும் இதயம் இருந்தது. சந்தேகத்திற்கு இடமின்றி வாங்குபவர்கள் மூச்சு திணற, பீதியுடன் பின்னோக்கிக் குதித்தனர்.


Ogilvy & Mather Advertising மற்றும் PETA Asia மக்களுக்கு விலங்குகள் படும் அவதியினை எடுத்துரைக்கவே இந்த‌ முயற்சியினை எடுத்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், குறைந்தது 440,000 மலைப்பாம்புகள் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள காடுகளில் இருந்து பிடிக்கப்படுகிறது. பின் அவற்றின் தலை துண்டிக்கப்படுகின்றன‌. சில‌ நேரங்களில் அவை உயிருடன் தோலுரிக்கப்படுகின்றன‌.

எது நவ நாகரீகம் ?

ஒரு தோலினாலான‌ கைப்பை தயாரிக்க‌ ஒரு படுகொலைப் போதாது ; நான்கு முதலைகள் தேவைப்படுகின்றன‌.
இதை பார்க்கும் போது அவ்வளவு காசு கொடுத்து மற்றொரு பையினை வாங்க‌ நினைக்கிறீர்களா?

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.